Tuesday, 6 March 2018

மலர் மருத்துவம்

அன்னாசி பூ:

செந்தாழை என்பது ஒரு பழம் மற்றும் அதன் மரத்தின் பெயராகும். இதன் மற்றொரு பெயர் அன்னாசி ஆகும். இதை மராட்டி மொக்கு என்றும் அழைப்பார்கள். இது பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. அன்னாசி என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது. இது பிரமிலசே இனத்தைச்சேர்ந்த தாவரம் ஆகும்.
இப்பூவை உலர்த்திய பின் நன்றாக இடித்து மெல்லிய கண்ணுள்ள துணியில் சலித்துத் தூள் செய்து ஒரு சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். நாள்தோறும் கால்விராகன் எடை எடுத்துக் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவரப் புளியேப்பம் நீங்கும். பலவீனத்தைப் போக்கும் ஆசீரணம் மாந்தம் முதலியவைகளைக் கண்டிக்கும்.       



அரளி பூ:

அரளி விஷத் தன்மை வாய்ந்த தாவரம். இதன் மலர்களின் அலங்கார மதிப்புக்காக வளர்க்கப்படுகிறது. இந்த தாவரம் இந்தியா முழுவதும் தோட்டங்களிலும் கோவில் பூந்தோட்டங்களில் அன்றாட பூஜைகளுக்குப் பயன்படுத்துவதற்கென வளர்க்கப்படுகிறது. 
மலர்கள், சிவப்பு அல்லது மஞ்சள், வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. இத்தாவரம் தற்கொலைக்கான முயற்சியுடனும், கருக்கலைப்புடனும் தொடர்பு படுத்தப்பட்டதாகும். ஆனால் இதில் மருத்துவப் பயனும் அடங்கியுள்ளது.
ஆண்டு முழுவதும் பூக்கும் செடிவகைகளில் அரளிச் செடியும் ஒன்று. இது அலரி என்றும் கஸ்தூரி ,கஸ்தூரிப் பட்டை என்றும் கணவீரம் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
பல நிற வகைகள் இதில் உண்டு வெண் நிறமானது வெள்ளலாி எனப்படும். சிவப்பு நிறமுள்ளது செவ்வரளி எனப்படும். வகைகள் பல இ௫ந்தாலும் பொதுக்குணம் ஒன்றே.
"வெப்பருசி குட்டம் விதாகம் சொறி சிரங்கு செப்பிரத்தம் புண்பத்தஞ் சென்னியொி-வியப்படியில் தங்குமோ கும்பத் தனத்தணங்கே! வாசஞ்சேர் கொங்கலரிப் பூப்பெயரைக் கூறு"
அதாவது இது பித்தநோய், புடை, கிரந்தி, சுரம், தலையெரிவு, அரோசகம் குட்டம் முதலிய பிணிகளைப் போக்கும். இப்படிப் பல பிணிகளைப் போக்குவதாக இருப்பினும் ஊமத்தையைப்போல் நஞ்சு உள்ளீடாக இருப்பதால் அனுபவமற்றவர் ஔடதச் சேர்க்கைகளில் உபயோகப் படுத்தக் கூடாது. இவற்றைக் கைதேர்ந்த மருத்துவர்கள்தான் மருந்தாக்க வேண்டும். ஏனெனில் சற்று அஜாக்கிரதையாகப் பயன்படுத்தினால் விஷத் தன்மையடைந்து விபரீதமான விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.       

அகத்திப்பூ:



அகத்தி இலையைச் சமைத்துச் சாப்பிடலாம். அதுபோலவே அகத்தி பூவையும் சமையல் பாகமாகச் செய்து சாப்பிடலாம். எலும்புகளையும் பற்களையும் வளரச் செய்யும் சுண்ணம்புச் சத்து இதில் அடங்கி உள்ளது. நல்ல சீரண சக்தியைக் கொடுக்கும் மலச்சிக்கலை நீக்கும். வெப்பத்தினால் தோன்றும் பித்தத்தை நீக்கும் புகையிலை மற்றும் சு௫ட்டு பீடி சிகரெட் முதலிய லாகிரி காளால் உண்டாகும் தீய குணத்தையும் போக்குவதில் இது வெகுவாக உதவுகிறது.
“புகைப்பித்தமும் அழாற் பூாிக்கும் அந்த வகை பித்தமும் அனலும் மாறும்-படுத்துச் சகத்தி லருந்தாத் தனியமிர்தே! நாளும் அகத்தி மலருக் கறி.”
உடல் காங்கைக்கு அன்றலா்ந்த அகத்திப் பூ ஒரு பலம் எடுத்து ஒரு கோப்பை ஆவின் பாலில் காய்ச்சி சிறிது சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் சாப்பிட உடல் காங்கை நீங்கும் மேற்கண்ட பிணிகளும் போகும்.   

பெண்களின் மார்பக கட்டியை கரைக்கும் வல்லமை படைத்த கானா வாழை

#கானா_வாழை… #Commelina_benghalensis என்பது இதன் தாவரவியல் பெயராகும். இதற்கு, கானான் வாழை, கானான் கோழிக் கீரை, காணாம் வாழை ஆகிய வேறு பெயர்களும் உண்டு.
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த கானா வாழை சைனா, தைவான், ஜமைக்கா, அமெரிக்கா, கலிபோர்னியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வழியாக இந்தியாவை வந்தடைந்தது.
நீண்ட நெடிய பயணம் செய்திருக்கும் இந்த மூலிகை தமிழ்நாட்டில் தானாகச் செழித்து வளரும் ஒரு தாவரமாகும். குறிப்பாக ஈரம் நிறைந்த நிலங்களிலும் கடற்கரையை அடுத்துள்ள நிலங்களிலும் பூங்காக்களிலும் வளரக்கூடியது. களைச் செடியாக பார்க்கப்படும் இதன் இலைகள் முட்டை போன்ற வடிவத்தில் காணப்படும், பூக்கள் நீல நிறத்தில் இருக்கும்.
#கானா_வாழை
கானா வாழையை ஓர் அற்புத மூலிகை என்று சொன்னால் அது மிகையாகாது. அதன் பயன்பாடு அறிந்தவர்களைவிட அதை பயன்படுத்திப் பார்த்தவர்களுக்குத்தான் அதன் மகத்துவம் தெரியும்.
இதிலுள்ள வேதிப்பொருள்கள் நோய் உண்டாக்கும் கிருமிகளை ஒழித்துப் புண்களை ஆற்றும் சக்தி படைத்தது. இதைப் பழங்குடி மக்களும் அவற்றைச் செய்து பார்த்து பலனடைந்த தமிழர்களும் புரிந்து வைத்துள்ளனர். இதன் தண்டுகளில் மாவுச்சத்தும் மியூசிலேஜ் என்ற நீர்ச்சத்தும் நிறைந்திருக்கிறது.
புரதச் சத்தின் கருவூலமாகவும் இது இருப்பதால் கால்நடைகளுக்குப் பிடித்த ஒரு தாவரமாகும். குறிப்பாக கன்றுக்குட்டிகள் விரும்பிச் சாப்பிடுவதால் இதை `கன்றுக் குட்டிப்புல்’ என்று அழைக்கின்றனர். இளங்கன்றுக் குட்டிகள் தாய்ப்பாலை மறக்கவும் அதிக அளவு பால் கொள்முதல் செய்வதற்காகவும் கன்றுக் குட்டிகளுக்கு இந்த செடியை உணவாகக் கொடுப்பார்கள்.
பெண்களின் மார்பகத்தில் உண்டாகும் கட்டிகள், எரிச்சல், வலி, வீக்கம், புண் ஏற்படும்போது கானா வாழையின் முழுச் செடியையும் அரைத்து பற்றுப் போடுவதன்மூலம் பலன் கிடைக்கும்.
குறிப்பாகக் கால்களில் நீர் தேங்கி வீக்கமும் வலியும் சேர்ந்து காணப்படும் வாத நோயைக் குணப்படுத்துவதில் இது கை கண்ட மருந்தாகத் திகழ்கிறது. மேல்நாட்டு மருத்துவர்கள் நீரை வற்றச் செய்யும் தன்மையும் உள் அழலை ஆற்றும் தன்மையும் கானா வாழைக்கு உண்டு என்கிறார்கள்.
தாம்பத்ய உறவின்போது உணர்ச்சியைத் தூண்டி உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடியது இந்த கானா வாழை. ஒரு டம்ளர் தண்ணீரில் இதன் முழுச்செடியுடன் தூதுவளைப்பூ, முருங்கைப்பூ சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்துக் காய்ச்சி சூடான பால், பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.
இதை ஆண்கள் 40 நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால் தாது பலம் உண்டாகி குழந்தைப்பேறுக்கு வழிவகுக்கும். கானா வாழைக் கீரையுடன் கொட்டைப்பாக்கு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தாம்பத்யம் சிறக்கும். இதன் சாற்றில் கசகசாவை ஊற வைத்து அரைத்து தேன் விட்டு குழைத்துச் சாப்பிட்டு வந்தாலும் தாம்பத்யம் பலப்படும்



No comments:

Post a Comment