Saturday, 3 March 2018

கடுக்காய்_பொடிசர்வ_ரோக_நிவராணி

கடுக்காய்_பொடிசர்வ_ரோக_நிவராணி

நோயற்ற வாழ்வு வாழவும், உடலினை உறுதி
செய்யவும் இயற்கை நமக்கு பல்வேறு
வளங்களை வழங்கியுள்ளது.
நமது உடலை
வலிமையுறச் செய்வதில் கடுக்காய் முக்கிய
பங்கு வகிக்கிறது.
கடுக்காய் மரம் 4000
ஆயிரம் ஆண்டுகள் பழமையானது
புராணங்களிலும் இம்மரத்தைப் பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் தாயகம்
இந்தியா தான்.
கடுக்காய்_வகைகள்
பிஞ்சு கடுக்காய்,
கருங்கடுக்காய்,
செங்கடுக்காய்,
வரிக்கடுக்காய்,
பால்கடுக்காய்
என, பல வகைகள் உண்டு. கிடைக்கும்
இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடும்.

இவை_தவிர………?
காபூல் கடுக்காய்,
சூரத் கடுக்காய்
எனும் வகைகளும் இங்கே கிடைக்கின்றன.
#பிஞ்சு கடுக்காய்
மலச்சிக்கலுக்குநிவாரணம் தரும்.
கருங்கடுக்காய்
மலத்தை இளக்குவதுடன்
உடலுக்கு அழகும் மெருகும் தரும்.
செங்கடுக்காய்
காச நோயைப் போக்கி
மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும்.
வரிக்கடுக்காய்
விந்தணுக்களை உயர்த்தி
பலவித நோய்களையும் போக்கும்.
பால்கடுக்காய்
வயிற்று மந்தத்தைப்
போக்கும்கடுக்காயை………விஜயன்,அரோகினி,
பிருதிவி,அமிர்தமரிதகி,த்ருவிருத்தி
என அதன் புறத்தோற்றத்தையும் மருத்துவக்
குணத்தையும் கொண்டு வகைப்படுத்திஉள்ளது.
சித்த_ஆயுர்வேத #மருந்துவங்கள்.
கடுக்காய்_பொடியின் #பயன்கள்
1. இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
2. பிராண வாயு அதிகரிக்கிறது.
3. வாய் மற்றும்குடல் புண்களை ஆற்றும்
4. இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 300 மடங்கு
அதிகமாகிறது. ( 300% ஆக்சிஜன் = 2 மணி
நேரம் பிராணயாமம்)
5. மலசிக்கலை நீங்குகிறது.
6. இது ஒட்டு மொத்த வயிற்றயுமே சுத்தம்
செய்கிறது.
7. இளமையாக வைத்திருக்கும்.
8. வாழ்நாளை அதிகரிக்கிறது.
9. வாய் துர்நாற்றம் அகலும்.
10. எதிர்மறையான எண்ண பதிவுகளை
அகற்றும்.

#எடுத்துக்_கொள்ளும் #முறை:

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்
1ஸ்பூன் கடுக்காய்
பொடியுடன் ஒரு டம்ளர்
தண்ணீர் சேர்த்து குடித்து வர வேண்டும்.

நமது உடலில் நோய் தோன்றக் காரணம்என்னவெனில்…
உஷ்ணம்,காற்று,
நீர்
ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல்
அல்லது குறைதல்தான்.இதனாலேயே நோய்
தோன்றுகிறது.உஷ்ணத்தால்
(நெருப்பு) பித்த நோய்களும்,
காற்றினால(வாயு) வாத நோய்களும்,
நீரால்கப நோய்களும்உண்டாகின்றன.

பிணியுடையவனே மனிதன். தனக்கு வரும்
பிணியை மதிநுட்பம், மன திடம் போன்றவற்றால் போக்கிக் கொள்வதே சாமர்த்தியம்.

மனித உடலைப் பீடிக்கும் நோய்கள் மொத்தம் 4448 ஆகும். அதில் மிகவும்
கடுமையான நோய்கள் 448

கடுமையான நோய்கள் தேகத்தைத் தாக்கினால்,
குணமாக தாமதமாகும்.அதற்க்குவிரைவில் நலம்பெறஉடலில் உள்ளஅழுக்குகளை அகற்றிக்
தூய்மை செய்யும்
வல்லமை கடுக்காய்க்கு
உண்டு.
கடுக்காயை மருந்தாக்குவது_எப்படி?
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக்
கடைகளிலும் கிடைக்கும். தரமான
கடுக்காயை வாங்கி வந்து உடைத்து,
உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு,
நன்கு தூளாக அரைத்து வைத்துக்
கொள்ளவும்.
இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும்நோய்கள்
கண் பார்வைக்
கோளாறுகள்,
காது கேளாமை,
சுவையின்மை,
பித்த நோய்கள்,
வாய்ப்புண்,
நாக்குப்புண்,
மூக்குப்புண்,
தொண்டைப்புண்,
இரைப்பைப்புண்,
குடற்புண்,
ஆசனப்புண்,அக்கி,தேமல்,படை,
தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம்,வெள்ளைப்படுதல்,மூத்திரக்
குழாய்களில் உண்டாகும் புண்,
மூத்திரஎரிச்சல்,கல்லடைப்பு,சதையடைப்பு,
நீரடைப்பு,பாத எரிச்சல்,மூல எரிச்சல்,உள்மூலம்,
சீழ்மூலம்,ரத்தமூலம்,ரத்தபேதி,பௌத்திரக் கட்டி,
சர்க்கரை நோய்,இதய நோய்,மூட்டு வலி,உடல் பலவீனம்,உடல் பருமன்,ரத்தக் கோளாறுகள்,
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள்.
போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள்.
உங்களை எந்த
நோயும் அணுகாது.எனவே, இனி உங்கள்
இரவு மெனுவில் கடுக்காய் இருப்பது நோயில்லா வாழ்வுக்கு தரும் சிறப்பு டிப்ஸ்

No comments:

Post a Comment