💐💐அனைவருக்கும் ஆத்ம நமஸ்காரம் உங்கள் மீது இறைவனுடைய சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக🌹🌹🌹
அளவறிந்து அமைதியாய் சாப்பிட்டால் ஆரோக்கியம் நம் பக்கம் நிற்கும். இல்லாவிட்டால் வள்ளுவர் சொல்வதுபோல் நோய்தான் நம் பக்கம் நிற்கும். இன்றைய இளைய தலைமுறையினருக்குச் சாப்பிடக்கூட நேரம் இல்லை. அவசரம் அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓடுவது நிறைய வியாதிகள் வருவதற்குக் காரணமாகிவிடுகிறது.
ஒரு மனிதனுக்கு ஒரு நோய் வருவதற்கு உடலில் ஏற்படும் மாற்றங்களும் கர்ம வினைகளாலும் ஏற்படுகின்றது என்பதை சித்தர்களுடைய கூற்றாகும் இன்றைய காலகட்டத்தில் நோய்களுக்கும் பஞ்சமில்லை பலவகை மருந்துகளுக்கும் பஞ்சமில்லை நோய்கள் குறைந்தபாடும் இல்லை மருந்துகள் ஒழிந்த பாடும் இல்லை எல்லாமே வந்து கொண்டு தான் இருக்கின்றது எனது முன்னோர்கள் எத்தனையோ பெயர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அவர்களுடைய வாழ்க்கை சுழற்சி முறைகளும் அவர்களுடைய ஆரோக்கிய வழிபாடு முறைகளும் வேறு ஆகவே காணப்படுகின்றது
ஒரு மனிதனுக்கு ஒரு நோய் வருகின்றது என்றால் அது எதனால் வருகின்றது என்பதை முதலில் அறிய வேண்டும் பரம்பரை நீதியாகவா அல்லது இடையில் வரப்பட்ட தா என்பதை அறிந்தாலே சரியான முறையில் சிகிச்சை அளித்து அந்த மானிடனின் உயிரை காப்பாற்ற முடியும்
நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை. எனவே நீங்கள் நோய் வருவதற்கு முன் உங்களை என் நிலை காத்துக் கொள்ளுங்கள் அது உங்களுடைய சாமர்த்தியும் உங்களுடைய புத்திசாலித்தனம
(சுருக்கமாகவே கூறியுள்ளேன் )
என்னுடைய அனுபவத்தில் நான் என்னுடைய குருநாதரின் வழிகாட்டுதலுக்கு இணங்க பல மானிடர்களுக்கு கொடுத்து குணப்படுத்தியவைகளை பதிவிடுகின்றேன். நீங்களும் குரித்து வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கைகளிலும் உபயோகப்படலாம் என்று நினைக்கின்றேன்
💥பஞ்ச தீபக்கனி சூரணம்💥
🌿☘️சுக்கு
🌿☘️மிளகு
🌿☘️திப்பிலி
🌿☘️சித்தேலம்
🌿☘️சீரகம்
🌿 வாகைக்கு சம எடை எடுக்கவும்☘️
ஒரு சிறு அளவாக உங்களுக்கு தேவையான அளவு
இவற்றையெல்லாம் முதலில் சுத்தம் செய்ய வேண்டியவற்றை சுத்தம் செய்து சுத்தி செய்ய வேண்டியவற்றை சுத்தி செய்து நன்றாக வெயிலில் காயவைத்து இடித்து அரித்து சூரணம் செய்து எடுத்துக் கொள்ளவும் அதன் பின்னர் சம எடைக்கு மாச்சீனி கலந்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும்
தினம் இரு வேலை தேன் அல்லது பசு நெய்யில் 1-2 ஒன்று தொடக்கம் இரண்டு கிராம் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரவும்
💯திரும்வியாதிகள்💯
💢உட்டனா நோய்
💢சூலை
💢வாயு
💢பித்த வாயு
💢வயிறு பெருமள்
💢 செறியாமை சாப்பிட்ட பின்பு சரிபாட்டுத் தன்மை இல்லாமல் இருக்கும்
💢 மாந்தம்
💢 மயக்கம்
💢 கிறுகிறுப்பு
💢 மூல வாய்வு
💢அத்திசுரம்
ஆகிய நோய்கள் எல்லாம் தீரும் கைகண்ட சூரணம்
நிவர்த்தி ஆகும் குணமாகும் இதுவும் ஒரு கை இரண்டு முறையே இது என்னுடைய பாரம்பறியா முறையாகும் என்னுடைய சிகிச்சை முறைகளில் அனேகமானவர்களுக்கு கொடுத்து நோய் நிவர்த்தி உண்டாகிய ஒரு மாபெரும் மருந்து நீங்களும் இதனை செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்
நோய் போதுவானது அது எல்லாருக்கும் வரும் நாமதான் கொஞ்சம் கவனமா இருக்கணும்
No comments:
Post a Comment