Saturday, 24 February 2018

மூட்டு வலிக்கு எளிய நிவாரணம்

மூட்டு வலிக்கு எளிய நிவாரணம்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலைப் பார்ப்பது, அதிக தூரம் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது, எடை அதிகமான பொருட்களை அடிக்கடி தூக்குவது என இப்படிப்பட்ட வேலைகளால் பலருக்கும்..... இப்படி எதுவும் செய்யாமலே கூடவும் இப்போதெல்லாம் இடுப்பு வலி (lower back pain), குறுக்கு வலி, கீல்வாதம் (Sciatica ) போன்ற வலிகள் மனிதனின் அன்றாட வாழ்வில் பெரும் தொல்லையாகவே இருந்து வருகிறது.
மேற்சொன்ன காரணங்கள் எதுவுமே இல்லாமல் சிலருக்கு எப்போதும் இந்த வலியால் பாதிக்கப்படுவர். பொதுவாக இப்போது இந்த வலியால் அவதிப்படாதவர்களே யாருமே இல்லை எனலாம்.
இதற்கு தீர்வாக அனைவரும் வீட்டிலையே செய்து கொள்ள எளிமையான வழி ஒன்றை படத்துடன் விளக்கியுள்ளேன். பயமும் இல்லை. பக்க விளைவுகளும் இல்லை. முயற்சி செய்து தான் பாருங்களேன்.
சமமான தரையில் படுத்துக் கொண்டு, இடுப்பின் கீழ் பகுதியில் (lower back) இரண்டு கை விரல்களையும் இறுக மூடி மடித்து ஒரு நிமிடத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு பக்கமாக ஒருக்களித்து நம்முடைய மூடிய கையை (அ) டென்னிஸ் பந்தை படத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில் வைத்து பத்து நிமிடங்கள் அமைதியாக கண்ணை மூடி மூச்சை மெதுவாக இழுத்து விட வேண்டும். அதன் பிறகு அடுத்த பக்கமாக ஒருக்களித்து படுத்து முன்பு செய்தது போலவே செய்யவும் (இடது மற்றும் வலது புறம் மாறி மாறி ) இப்படி செய்தால் உடனே வலியில் இருந்து மீள முடியும்.
நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் இதனுடன் மேலும் சில புள்ளிகளை நம் கையால் அழுத்தம் கொடுக்க வேண்டும்.அக்குபஞ்சர் அறிவோம்   

கோதுமைபுல் பலன்கள்

* * * * * * * * * * * * * * * * *
சர்க்கரை வியாதிக்காரங்களும், சர்க்கரை வியாதி வந்திடுமோன்னு பயப்படறவங்களும் தங்களோட மெனுல இப்போ சப்பாத்தியை கட்டாயமாக்கிட்டாங்க. சப்பாத்தி-கஞ்சி-கூழ் என கோதுமையோட உபயோகம் நமக்கு இவ்ளோதான் தெரியும்.
அத தாண்டி ஒரு அற்புதமான விஷயம் இந்த கோதுமை புல்.
ஆமாங்க நம்மூர்ல அருகம்புல் சாறு குடிக்கிறது மாதிரி இந்த கோதுமை புல் சாறு வடநாட்ல ரொம்ப பிரபலம். ஆனா நம்மூர் பக்கம் இப்போதான் பெரிய மால்கள்ல கோதுமைபுல் ஜூஸ் விக்க ஆரம்பிச்சு இருக்காங்க. கொஞ்சம் கொஞ்சமா மக்களுக்கு இப்பத்தான் இது பத்தின அருமைகள் தெரிய ஆரம்பிச்சிருக்கு.
கோதுமை புல் சாறுல என்னென்ன சத்துக்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா!!!
இது ஒரு புல் வகையைச் சேர்ந்தது. ஆனால் செடி முழுசுமே மருந்தாகும். நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, மக்னீசியம், அமினோ அமிலம், விட்டமின் – B1, B2, A, B 1, 2, 3, 5, 6, 8 & 12 C, E & K மற்றும் நியாசின் இப்படி பலவிதமான சத்துக்களை உள்ளடக்கியது.
சரி இதனால என்ன பலன்?
1. இரத்தத்தை சுத்தம் செய்யும். உடலில் ஹீமோகுளோபின் அளவை சீராக்கும்.
2. நீண்டகாலமாக மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு கல்லீரல் மற்றும் இரத்தத்தில் சேர்ந்திருக்கும் நச்சு கழிவுகளை வெளியேற்றும்.
3. பெருங்குடலை சுத்தம் செய்யும்.
4. மலச்சிக்கலை போக்கும்.
5. உயர் இரத்த அழுத்தம் குறைய உதவி செய்யும்.
6. முகப்பரு மற்றும் உடலில் இருக்கும் கரும்புள்ளிகள், வடுக்கள் மறைய உதவும்.
7. உடலில் ஆக்ஜிஸன் அளவை சமன்படுத்தும்.
8. இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் உடல் சோர்வு, பாத எரிச்சல், குத்தல் போன்றவற்றை சரிசெய்யும்.
9. நரைமுடி 50 வயதுவரை வராது. இளமையாக வாழ விரும்புபவர்கள் கோதுமைபுல் சாறு (அ) பொடியை தொடர்ந்து எடுக்கலாம்.
10. அதிகப்படியான கொழுப்பு உடலில் கூடுவதை தடுப்பதோடு, செரிமாணத்தை சீர்படுத்தும்.
11. சிறுநீரக சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அதாவது சிறுநீரக பாதையில் உண்டாகும் தொற்று, விரைவீக்கம், சிறுநீரக கற்கள், அடிக்கடி சிறுநீர் கழித்தல்(அ)போன்ற உணர்வு இவற்றிலிருந்து விடுபட பேருதவி புரியும்.
12. சுவாசமண்டலத்தை சீராக்கும். நுரையீரல் தொற்று, சளி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல், தொண்டை வலி இவற்றிலிருந்து காப்பாற்றும்.
13. ஆரம்ப கால நிலையில் உள்ள முட்டிவலிகளை குணமாக்கும்.
14. ஹீமோகுளோபின் குறைபாட்டினால் அவதியுறும் குழந்தைகளுக்கு (Beta Thalessemia என்கிற வியாதி) தொடர்ந்து 18மாதங்களுக்கு கோதுமைபுல் சாறை காலை வெறும் வயிற்றில் கொடுத்துவர அந்த வியாதியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.
15.இந்த சாற்றை கொப்புளித்தால் தொண்டை புண் சீக்கிரமே ஆறும். தொண்டை கரகரப்புக்கு நீங்க “கிச் கிச்” மாத்திரை எல்லாம் எடுக்க வேண்டாம். சிலருக்கு பல் ஈறுல வீக்கம் ஏற்பட்டு இரத்தம் கசியும். சீழ் வரும். இதை இந்த கோதுமை சாறு குணமாக்கும்.
16. வெண்புள்ளி, தேமல் மற்றும் சொரியாஸிஸ் போன்ற சரும வியாதிகள் குணமாகும்.
17. இதெல்லாம் விட ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்....கேன்சர் நோய் உள்ளவங்க இந்த சாற்றை(அ)பொடியை தொடர்ந்து எடுத்து வந்தா கேன்சர் செல்கள் அழியும். கேன்சர் செல்கள் உருவாகாமல் தடுக்கும்.
என்னது...இதுல இவ்ளோ சக்தி இருக்கா...இந்த புல் எங்க கிடைக்கும். கோதுமை பஞ்சாப்ல, ஹரியானால தானே விளையுதுன்னு சொல்வாங்க. அப்போ நாம அங்கதான் போகணுமா??
அதெல்லாம் எங்கயும் போக வேணாம். உங்க வீட்ல நீங்களே விதைக்கலாம். உடனே யோசிக்காம “எங்களுக்கு விவசாய நிலம் கிடையாதே”ன்னு சொல்லாதீங்க. நாம என்ன கோதுமை அறுவடை பண்ணி கடைங்களுக்கு சப்ளையா செய்ய போறோம். இப்போ ஒரு கிலோ கோதுமை வாங்கலாம். ஒரு பத்து பிளாஸ்டிக் ட்ரே (அ) ஸ்வீட் பாக்ஸ் (அ) சின்ன மண்தொட்டிகள் வாங்கலாம்.
அதுல கொஞ்சம் மண்ணும், எருவும் கலந்து நிரப்பி வைச்சுக்கலாம். வாங்கிட்டு வந்த கோதுமைல ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஏழெட்டு மணி நேரம் ஊற வச்சு, அப்புறம் அத ஒரு துணில கட்டி லேசா காத்தாட விடலாம். மறுநாள் பார்த்தீங்கன்னா அந்த கோதுமை விதைகள் முளை விட்டிருக்கும். நாம ஏற்கெனவே ரெடி பண்ணி வச்சிருக்க டிரே, மண்தொட்டியில இந்த முளைத்த கோதுமையை தூவி அப்படியே மேலயும் கொஞ்சம் மண்ணை தூவி ஒரு நாளைக்கு ஒரு முறை தண்ணி தெளிச்சா அழகா முளைச்சு வரும். இப்படி இரண்டு நாளைக்கு ஒரு ட்ரேன்னு, பத்து ட்ரேல ரெடி பண்ணிக்கலாம் சத்தான கோதுமைபுல்லை.
ஒரு மூணு – நாலு இன்ச் அளவு வளர்ந்த கோதுமை பயிரை கத்தரித்து எடுத்து அதை மிக்சியில் போட்டு தண்ணீர் ஊற்றி நல்லா அடிச்சு வடிகட்டி குடிக்கணும். இதான் கோதுமைபுல் ஜூஸ். எப்போ வேணும்னாலும் குடிக்கலாம்.
வெறும் வயித்துல குடிச்சா பலன் அதிகம்.
இப்படியெல்லாம் தொட்டில கோதுமைபுல் வளர்க்க முடியாதுன்னு சொன்னீங்கன்னா உங்க பக்கத்துல இருக்க ஆர்கானிக் கடைங்கள்ல வாங்கிக்கலாம்.
இயற்கை ஆர்வலர்கள் சிலர் நல்ல தரமான கோதுமைபுல் பொடி மக்களுக்கு அதிக அளவில் போய் சேரணும்ங்கற நல்லெண்ணத்தில கடைங்கள்ல கிடைக்கிற விலையை விட குறைவான விலையில், இலாப நோக்கமில்லாமல் 100கிராம் 250 ரூபாய்க்கு தந்துகிட்டு இருக்காங்க.
நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான சத்துக்கள் நிறைஞ்ச கோதுமைபுல்ல இனி நாம தவற விடவே கூடாது. கோதுமை புல் குடிக்கறோம். ஆரோக்கியமா வாழறோம். ஆரோக்கிய பாரதத்தை உருவாக்குவோம்.           

*படித்ததை பகிர்கிறேன்*

*மஞ்சள் காமாலைக்கு ஒரு வேளை மருந்து:*

ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்
நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது.
உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ
இது அவசியம் பயன் படும்.
சென்ற ஆண்டு எனது மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காணத் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.
ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது.
அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன்.
ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது.
ஆனால் பையன் உணவு சாப்பிடவில்லை. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தான்.தண்ணீர் குடித்தாலும் வாந்தி எடுத்தான்.
சந்தேகப்பட்டு கண்ணைப் பார்த்ததில் மஞ்சள் நிறம் தெரிந்தது.
எனவே இரத்தம்.,சிறுநீர் பரிசோதனை செய்துவிடலாம் என அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தேன்.
அவர் பரிசோதனை செய்துப் பார்த்து விட்டு,மஞ்சள் காமாலை அதிகமாக உள்ளது.ஆஸ்பிட்டலில் தங்கவேண்டும்.தொடர்சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.ஆறுமாதமாவது மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.என பயமுறுத்திவிட்டார்.
மருத்துவம் குறித்த புரிதல் உள்ளவனாதலால்,சரி நாளை வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன்.
கிராமப்புரங்களில் மூலிகை மருந்துக் கொடுத்து அதை எளிதில் குணப்படுத்திவிடுவார்கள்.
மேலும்,மஞ்சள் கரிசலாங்கண்ணி ,கீழாநெல்லி இரண்டும் சிறந்த மருந்து என்பதும் தெரியும்.இரண்டு மூலிகையும் எங்கள் கிராமப்புறங்களில் எளிதில் கிடைப்பதுதான்.
இரண்டுநாளாக தண்ணீர் கூட வயிற்றில் நிற்காததால் பையன் மிகவும் சோர்ந்துவிட்டான்.
அப்போது ஒரு நண்பர்,விழுப்புரம் அருகே கெங்கராயம் பாளையம் என்ற ஊரில்,
இதற்கு ஒரேவேளை மருந்தில் குணமாக்குகிறார்கள் எனச் சொன்னார்.
பின்னும் இரண்டு நபர்கள் அதை உறுதிப் படுத்தினர்.
அன்றே பையனை அழைத்துக் கொண்டு அந்த ஊருக்குச் சென்றேன்.
மனசுக்கு மிகவும் கவலையாக இருந்தது.எதுவும் சாப்பிட முடியாதநிலையில் பையன்.
அங்குச் சென்றவுடன்,அந்த மருத்தவர் வீட்டை அடைந்தால் நூறு பேருக்கு மேல் அமர்ந்துள்ளார்கள்.தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.ஒரு சிலர் பெங்களூரிலிருந்தும் வந்திருந்தனர்.அந்தளவு அந்த மருத்துவரின் பேர் பரவியுள்ளது.
மஞ்சள் காமாலை க்கு மட்டும் மருத்துவம் பார்க்கிறார்.
நோய் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.எல்லோர் முகத்திலும் நம்பிக்கை.
எல்லோரையும் வரிசையாக அமரவைத்துவிட்டு,சாதம் பொங்கி அதில் வெல்லம் கலந்து.,ஒரு சிட்டிகை மருந்தும் கலந்து கையில் ஒரு உருண்டை தந்து விழுங்கச் சொல்கிறார்கள்.அது இனிப்பாக இருப்பதால் எல்லோரும் விருப்பமுடன் உண்டு விடுகின்றனர்.
நாளையிலிந்து நோய் இறங்க ஆரம்பித்துவிடும்.ஐந்து நாளில் நார்மலாகிவிடுவார்.அதுவரை கீரைவகைகளை மட்டும் தினம் உணவில் சேர்க்கவும்,எனவும்
இதிலேயே சரியாகிவிடும் மீண்டும் வரவேண்டாம் எனச் சொல்லி அனுப்பி
விடுகின்றனர்.பெரியவர்களுக்கு மட்டும் சாராயம் அருந்தக்கூடாது என்றக் கண்டிப்பு.வேறு பத்தியமில்லை
வழக்கமான உணவு உண்ணலாம்.
என் பையனுக்கு மருந்தைக் கொடுத்துவிட்டு,அழைத்து வந்தேன் அடுத்த அரைமணிநேரத்தில் தண்ணீர்
வேண்டும் எனக்கேட்டான்.பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன் கால் பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டான்.வாந்தி எடுக்கவில்லை.வீடு வருவதற்குள் பசிக்கிறது என்றான்.ஓட்டலில் இரண்டு இட்லி வாங்கித் தந்தேன்.சாப்பிட்டுவிட்டான்.நான்கு நாளாக சரியாக சாப்பிடாதப் பிள்ளை சாப்பிட்டதும் எனக்கு சந்தோசம்.
பையன் முகத்தில் ஒருத் தெளிவு.
மருந் துக் கொடுத்த மூன்று மணிநேரத்திற்குள் இவ்வளவு மாற்றம்.
அன்று இரவு,மறுநாள் என பையன் உணவினை சாப்பிட ஆரம்பித்தான்.மூன்றாவது நாள் சிறுநீரின் நிறம் மாறி,ஒரு வாரத்தில் பூரணகுணமாகிவிட்டடான்.
எனக்கு ஆச்சர்யம் இன்றுவரைத்தீரவில்லை.சித்தமருந்திற்கு இவ்வளவு சக்தியா.
எவ்வளவோ அபூர்வமான மருத்துவத்தை மறைத்துவைத்தே பழகிவிட்டனர்.
மருந்திற்கு வாங்கிக் கொண்டது 30ரூபாய் மட்டுமே.
பல்லாயிரம் கணக்கானோர் இன்றும் ஒரே வேளை மருந்தில் குணமாகிச் செல்கின்றனர்.
விழுப்புரம் நகரிலிருந்து
பாண்டிச் செல்லும்
வழியில் 16கிமீ தூரம்
கெங்கராயம்பாளையம் உள்ளது.
மஞ்சள்காமாலைக்கு...
வேளாங்கண்ணி தாண்டி
பறவை தெற்க்கு
பொய்கை நல்லூரில்
வைத்தியர் மாயக்கண்ணன் மருந்துதருகிறார்..!!
வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை நகரிலும் இதே மாதிரி மூலிகை மருந்து 75 ஆண்டுகளுக்கு மேலாக தலைமுறை, தலைமுறையாக கொடுக்கிறார்கள். சென்னை-வேலூர் பஸ் ரூட்டில் சென்னையில் இருந்து 110 கிமீ தொலைவில் வாலாஜா உள்ளது

No comments:

Post a Comment