Saturday, 24 February 2018

மூல நோயாளிகள் கவனத்திற்கு!!!

மூல நோயாளிகள் கவனத்திற்கு!!!

புளி, புகையிலை, அகத்தி, வாதநாரயணி இலை, பாகற்காய், பூசணிக்காய், கோழி இறைச்சி உண்ண கூடாது. மேலும் போதை பொருட்கள், மது மற்றும் அதிகப்படியான வெய்யிலில் வேலை பார்ப்பது, இரவில் கண்விழிப்பது, பகலில் தூங்குவது என இத்தனையும் தவிர்க்க வேண்டும்.
கடுமையான பேதி மருந்து எடுக்க கூடாது.
பகல் உணவில் நெய், மோர் சேர்த்து கொள்வது, தாகத்திற்கு மோர் மற்றும் பழரசம், இரவில் பசும்பால் அருந்துதல் நலம் பயக்கும்.
உணவுமுறைகள் மற்றும் முறையான மருத்துவம் மூலம் எளிமையான முறையில் மலச்சிக்கல், மூலம் போன்ற பிரச்சனைகளில் இருந்து வெளி வரலாம்.   

சுகர் புண் மற்றும் ஆறாத புண்கள்!

ஆவாரம் பூ, இலை ஒரு கைப்பிடி எடுத்து நன்கு மை போல அரைத்து அதிலிருந்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை வெறும் வயிற்றில் மோரில் கலந்து குடிக்க வேண்டும். மீதி விழுதை ஒரு கரண்டியில் விளக்கெண்ணெய் சேர்த்து சிறுதனலில் வதக்கி ஆற வைத்து சுகர் புண் மற்றும் ஆறாத புண்கள் மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும்.
இம்முறையால் ஆறாத புண்களும் ஒரு சில நாட்களில் ஆறிவிடும்.            

முட்டிவலி! தோள் பட்டை வலி!

உடல் எடை கூடினால் முட்டிவலி, அதிக தூரம் டூவீலர் ஓட்டினால் இடுப்பு வலி(back pain), பெண்களில் பலருக்கு வலது தோள் பட்டை வலி.
இப்படி வலிகளால் அவதிப்படுபவர்களா நீங்கள்??? வலி நீங்க இதோ ஒரு எளிய வழி.
இரண்டு கைப்பிடியளவு முடக்கறுத்தான் கீரையை மை போல அரைத்து அதிலிருந்து நெல்லிக்காய் அளவு எடுத்து மோருடன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மீதி விழுதை உளுந்து மாவு அல்லது முட்டையின் வெள்ளை கருவுடன் கலந்து உடலில் வலியுள்ள பாகத்தில் பற்று இட வேண்டும்.
வலி குறையும் வரை இம்முறையை பின்பற்றலாம். பக்கவிளைவுகள் இன்றி வலிகள் எல்லாம் காணாமல் போகும்.   

இட்லி!!!

கைகுத்தல் அரிசியுடன், தோல் உளுந்து கொண்டு செய்யப்பட்டால் அது இட்லி.
பாலீஷ் செய்யப்பட்ட அரிசி மற்றும் தோல் நீக்கிய உளுந்து கொண்டு செய்யப்பட்டால் அது போலி இட்லி.
கைக்குத்தல் அரிசி, தோல் உளுந்தால் ஆன இட்லி சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை கூடாது. சுகர், பிபி நெருங்காது.
கூடுதல் தகவல்:
தோல் உளுந்தை இரவு ஊற வைத்து காலையில் வடிகட்டி முளைகட்ட விட்டு பின்பு அரைத்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் 300 மடங்கு அதிகமாகுமாம். இந்த தகவல் கூட நாம் அதிகமாக நம்பும் நவீன விஞ்ஞானம் தான் சொல்கிறது.            

உடல் எடை குறைய!!!

உடல் எடை குறைவதுடன் உடலும் வலுவடைய இரண்டு குறிப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவரவர் வசதிப்படி இதில் ஏதாவது ஒரு குறிப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
1. வேப்பிலை, வில்வம், துளசி, அருகம்புல் பொடி சம அளவு எடுத்து கலந்து வைத்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் அளவு தேனில் குழைத்து இருவேளை சாப்பிட உடல் எடை குறையும்.
2. தினசரி காலை, இரவு சாப்பாட்டுக்கு முன்பு
ஒரு ஸ்பூன் கொள்ளு,
ஒரு ஸ்பூன் எள்ளு
ஒரு ஸ்பூன் ஒமம்
இரண்டு டம்ளர் தண்ணீரில் கலந்து ஒரு
டம்ளர் அளவு கொதிக்க
வைத்து வடிகட்டி குடிக்கவும். உடலில் உள்ள கெட்ட
கொழுப்பு கரைந்து கணையம், கல்லீரல் வலுப்பெறும். உடல் எடையும் குறையும்.      

நூறாண்டு வாழ வேண்டுமா???

சிவகரந்தை!!!
ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆனால் அப்படி வாழ முடியவில்லை என்பதே நிதர்சனம்.
சிவகரந்தை எனும் அரிய வகை மூலிகை மனித உடலுக்கு முழு ஆரோக்கியத்தை தருவதுடன் இன்னும் பலபடிகள் உயர்ந்த நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் மிகக் குறைந்த செலவில்!
சிவகரந்தையை எப்படியெல்லாம் நம் உடலை பலப்படுத்தும் என்பதை பார்க்கலாம் வாங்க.
சிவகரந்தை சூரணத்தை(பொடியை) 5கிராம் அளவுக்கு(ஒரு டீஸ்பூன்) நெய், பால், தேன் ஏதாவது ஒன்றில் கலந்து உண்டு வர
1. ஒரு மாதத்தில் உடல் நாற்றம் நீங்கும்.
2. இரண்டு மாதங்களில் வாதம் நீங்கும்.
3. மூன்று மாதங்களில் பித்தம் நீங்கும்.
4. நான்கு மாதங்களில் குட்ட நோய்கள் நீங்கும்.
5. ஐந்து மாதங்களில் உடல் வெப்பம் நீங்கும்.
6. ஆறு மாதங்களில் ஞானம் அதிகம் உண்டாகும்.
7. ஏழு மாதங்களில் உடல் பொன் போல் ஆகும்.
8. எட்டு மாதங்களில் உடல் சட்டை போகும். அதாவது உடலில் உள்ள மலங்கள்(கழிவுகள்) நீங்கும். 9. ஒன்பதாம் மாதத்தில் ககனம் செய்ய (விண்வெளியில் செல்லும்) வல்லமை உண்டாகும்.
கூடுதல் தகவல் கேன்சர் வராமல் தடுக்கும். வந்தவர்களுக்கு சிவகரந்தை லேகியம் ஒன்றே மருந்தாகும்.
நம் சித்தர்கள் அருளிச் சென்ற இம் மூலிகை பற்றிய அரிய மருத்துவ குறிப்புகள் நம்மை வியப்பின் உச்சத்திற்கே அழைத்து செல்கிறதே! இவ்வளவு அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த
சிவகரந்தை சூரணத்தை உட்கொள்ளும் அனைவருக்கும் மேற்கூறிய அனைத்தும் கைகூடும் என்பதில் ஐயமில்லை.
குறிப்பு: இச்செடியின் இலை முதல் வேர் வரை அனைத்து
பகுதிகளும் நிழலில் உலர்த்தி சூரணம் செய்து கொள்ள வேண்டும். முடிந்தவர்கள் தானே செய்து கொள்ளலாம். இதில் ரகசியம் ஏதுமில்லை.

மலச்சிக்கல் மற்றும் மூலம் வியாதி!!!

மலச்சிக்கல் மற்றும் மூலம் வியாதியால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்யில் வதக்கி அரைத்து கொட்டைப்பாக்களவு காலை, மாலை இரண்டு வேளை என மூன்று நாட்கள் மட்டும் எடுத்தால் போதும். எளிய முறையில் தீர்வு கிடைக்கும்.   

கீரை, வாழைப்பழம், ஆப்பிள், எலுமிச்சை ஜூஸ்!!!!

கீரைகள் எப்போதுமே நம் உடலுக்கு நலம் பயக்கும் என்றாலும் அதை சமைக்கும்போது அதிலிருக்கும் நிறைய சத்துக்கள் வீணாவதோடு, முழுமையாய் நமக்கு கிடைப்பதில்லை என்பது உண்மை.
மேலும் அதிலிருக்கும் பச்சையம் வேக வைத்ததும் அதன் சக்தியை ஓரளவுக்கு இழந்துவிடுகிறது.
அப்படியானால் கீரைகளின் சக்தியை முழுமையாய் பெற முடியாதா? நிச்சயம் முடியும். புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை, தூதுவளை, முடக்கறுத்தான், பசலை, மணத்தக்காளி, முருங்கை இப்படி ஏதாவது ஒரு கீரையை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து நன்கு அலசியபின், அதனுடன் ஒரு வாழைப்பழம், ஒரு ஆப்பிள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு மிக்சியில் நன்கு அடித்துக்கொள்ளவும். பிறகு அதனுடன் அரைமூடி எலுமிச்சை சாறு கலக்கவும். இப்போது எந்த காரணிகளும் சிதையாத, மேலும் மெருகூட்டப்பட்ட கீரை பழச்சாறு தயார்.
இதை தொடர்ந்து குடித்து வர, உடல் நல்ல வலுவாவதோடு, அசதியும் உங்கள் பக்கமே அண்டாது. முயற்சித்து பாருங்களேன்.
குறிப்பு:- சிதைவடையாத பச்சையம் உடலின் ஆக்ஸிஜன் கிரகிக்கும் சக்தியை அதிகரிப்பதால் புற்றுநோய் அண்டாமல் இருக்க உதவும்.  

நெஞ்செரிச்சல், செரிமானமின்மை, வாயுத்தொல்லை!!!

சீரகம், ஓமம் இரண்டும் சம அளவு எடுத்து சீராக இளம்சூட்டில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
உணவுக்கு அரைமணிநேரம் முன் ஒரு டீஸ்பூன் பொடியை தண்ணீருடன் எடுத்து கொண்டு வந்தால் மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளுக்கும் தீரும்.
அனைத்து வயதினருக்கும் இது பொருந்தும்    

ஹெர்பல் டை!!!

அவுரி பொடி, மருதாணிஇலை பொடி சம அளவு தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலையில் தடவி அரைமணி நேரம் விட்டு அலசி விட வேண்டும்.
கெமிக்கல் "டை" இல்லாமலேயே அரைமணி நேரத்தில் மூலிகைகளால் தலைமுடி கருமை நிறம் அடைவதை காணலாம்.    

தூக்கமின்மை!!! (Insomnia)

இரவினில் தூக்கம் வராமல் தவிப்போருக்கான எளிய நிவாரணம்.
இரவு தூக்கம் தொலைத்து அதிக நேரம் புத்தகம் படிப்பது, மொபைல், சிஸ்டம், டிவி பார்ப்பவர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் பிரச்சினைகள் எளதில் தாக்கும்.
உடற்சோர்வு, மலச்சிக்கல், முடி உதிர்தல், கோபம், எரிச்சல் என இப்படி பல வியாதிகள் உண்டாகும். இதுவே அவர்களுக்கு பெரிய கவலையாகவும் மாறிவிடும்.
தூக்கமின்மை, மலச்சிக்கல் இரண்டுமே வியாதிகள் வருவதற்கான அறிகுறிகள்.
25 கிராம் கசகசாவை காலையில் ஊறவைத்து, இரவினில் மிக்ஸியில் நன்கு அரைத்து, இரண்டு டம்ளர் பாலில் கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு பால் சுண்டியதும் ஏலப்பொடியும், இனிப்புக்கு நாட்டுசர்க்கரை (அ) தேன் கலந்து குடிக்கலாம்.
இப்படி தொடர்ந்து பத்து நாட்கள் குடித்து வந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.     

வலியுடன் கூடிய ஆறாத சீழ் வடியும் புண், கட்டி, வலி குணமாக!!!

ஆறாத புண்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு காலில் உண்டாகும் புரையோடிய புண்களை குணப்படுத்த எளிய முறை.
கட்டியின் அளவைப் பொறுத்து தேவைப்படும் அளவு ஊமத்தை இலைகளையும், அதோடு சிறிது அரிசியையும் சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை சிறுதீயில் அடுப்பில் வைத்து களி போல் கிளற வேண்டும்.
களி பதம் வந்ததும் இறக்கி வைப்பதற்கு முன் விளக்கெண்ணெய்(castroil, ஆமணக்கு எண்ணெய்) (அ) நல்லெண்ணெய் சிறிது கலந்து கொள்ளவும்.
இளஞ்சூடாக இருக்கும் போதே களிம்பை கட்டி மீது வைத்து கட்டி வைக்க...ஒரிரு நாட்களில் கட்டி உடைந்து விடும். உடைந்த கட்டிகளும் விரைவில் பூரணமாக ஆறிவிடும்.

மிளகும்!!!காய்ச்சலும்!!!

மிளகு-1
தாய்ப்பால் -20 சொட்டு
மிளகின் மேல்தோலை சீவி எடுத்துவிட வேண்டும். சந்தனக்கல்லில் நான்கு சொட்டு தாய்ப்பால் விட்டு தோல் சீவிய மிளகை உரைத்து, அந்த விழுதை மீதி இருக்கும் தாய்ப்பாலோடு கலந்து இரண்டு கண்களிலும் 5,6 சொட்டுகள் விட....பகீரென எரியும். கண்களை திறந்து, திறந்து மூட வேண்டும்.
காய்ச்சலுடன், தலைக்கனத்துடன் படுத்திருந்த நபர் உடனே எழுந்து உட்காருவார்   


கூந்தல் கருமை பெற....

வெள்ளை கரிசாலை, கொட்டை கரந்தை இலை இரண்டையும் நிழலில் காய வைத்து பொடி செய்து ஒரு டீஸ்பூன் அளவு காலை, இரவு இரண்டு வேளையும் தேனில் கலந்து உண்டு வந்தால் இளநரை, முது நரை இரண்டும் மறைந்து கூந்தல் கருமை நிறம் அடையும்.
(சித்தர்களின் வழி தேடல்களில் இருக்கும் ஒருவர் கூற கேட்டது.)    

முகப்பொலிவுக்கு!!!

வயதால், மன இறுக்கத்தால் முகத்திலும், கழுத்திலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகம் மற்றும் கழுத்தில் தேய்த்து இருபது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வாரத்தில் மூன்று நாட்கள் என இந்த எளிய முறையைப் பின்பற்றினால் முகச்சுருக்கங்கள் நீங்கி இயற்கையான முறையில் இளமையோட வாழலாம்.
இது அனுபவமுறை. நல்ல பலன் கிடைக்கும்.    

வாயு தொல்லை நீங்க!!!

சுக்கு - 50 கிராம்
மிளகு - 50 கிராம்
திப்பிலி - 50 கிராம் 
இந்துப்பு - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்
கடுக்காய் - 50 கிராம்
பெருங்காயம் - 50 கிராம்
சாதிக்காய் - 50 கிராம்
இவை அனைத்தையும் முறைப்படி சுத்தி செய்து தனித் தனியாக மிக்ஸியில் போட்டு பொடி செய்து, பின் எல்லா பொடிகளையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தேன், மோர், வெந்நீர் இதில் ஏதாவது ஒன்றுடன் கால் டீஸ்பூன் அளவு கலந்து காலை, இரவு சாப்பிட்டு வர வாயு தொல்லை, விலா எலும்பு வலி, இடுப்பிலிருந்து மார்பு வரை வேதனை தரும் வாயு தொல்லை, மூச்சை அழுத்தி பிடிக்கும் நெஞ்சு வலி, முதலியவைகள் குணமாகும்.   

மோர்!!!

மோருண வளிமுதல் மூன்றையு மடக்கி
யாருமெய் யினைத்தின மாதரித் திடுமே - தேரையர் காப்பியம்.
மோர் தினம்தோறும் குடித்து வந்தால் உடலில் முக்குற்றங்களும்* கூடாமலும், குறையாமலும் ஒழுங்கு பெற செய்து உடலை ஒவ்வொரு ஆளும் ஆதரித்து வளர்த்து வரும்.
(முக்குற்றங்கள் - வாதம், பித்தம், கபம்) 

தீராத விக்கல்!!!

* * * * * * * * * * *
தீராத விக்கல் கூட கல்லீரல் சம்பந்தப்பட்ட வியாதிங்கறது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
உடனே இது பெரிய வியாதியான்னு பயந்துட வேணாம்.
விக்கல் நிறுத்த எளியவழி....
ஆப்ப சோடாவை (sodium bicarbonate)
ஒரு சிட்டிகை எடுத்து தேனோடு கலந்து கொடுக்க... விக்கல் உடனே நிற்கும்...   

வறட்டு மற்றும் தொடர் இருமலுக்கு

வறட்டு மற்றும் தொடர் இருமலுக்கு வீட்டில் இருக்கும் கடுகை சிறிதளவு எடுத்து மிக்ஸியில் அரைத்து குண்டுமணிஅளவு தேனில் கலந்து கொடுத்தால் இருமல் கட்டுக்குள் வரும்...எளிமையான கைவைத்தியம்     

நெல்லிக்காய், சுக்கு

* * * * * * * * * * * * * * *
300 கிராம் நெல்லிக்ககாய், 100கிராம் சுக்கு இரண்டையும் பொடி செய்து கலந்துகொண்டு அதனை ஒரு தேக்கரண்டி வீதம் நீரில் கலந்து காலையும் மாலையும் தொடர்ந்து அருந்தி வர கல்லீரலை நன்கு செயல்பட வைத்து ஜீரண சக்தியை அதிகரித்து நம் உடலில் தேங்கியுள்ள உள்ள கழிவுகளை முற்றிலும் வெளியேற்றும்.
மேலும் மூளைச் செல்களுக்கு நல்ல சக்தி அளித்து மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாக்கும்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். உடல் எடையை கூடாமல் தசைகளுக்கு பலம் அளிக்கும் தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது.
நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களான சளி, சைனஸ், மூக்கடைப்பு, இருமல் போன்ற வியாதிகளை கட்டுப்படுத்த உதவுகிறது. மற்றும் பித்தப்பையில் கல், போன்ற கோளாறுகளை சரி செய்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கும்.
பக்கவிளைவுகள் ஏதுமில்லாத இந்த எளிய உணவை மருந்தாக்கி உடல் உறுப்புகளை பலப்படுத்துவோம்


No comments:

Post a Comment