Wednesday, 28 February 2018

மூலிகைகளும், தீரும் நோய்களும்...!

மூலிகைகளும், தீரும் நோய்களும்...!



நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!
...அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்
ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்
ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு
தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு
நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்
நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்
முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்
வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்
அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்
வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்
நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்
நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்
சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்
திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு
அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்
சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு
ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்
வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்
வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்
ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்
செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்
ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்
முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)
திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்
திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்
வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்
கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்
கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம்
கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்
கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்
காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்
கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்   

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

Monday, 26 February 2018

தாமரை:

தாமரை:

தாமரையில் கல்விக்கு உரிய சரஸ்வதியும், செல்வத்துக்கு உரிய மஹாலட்சுமியும் அமர்ந்திருப்பதாக இந்து மதத்தினர் நம்புகின்றனர். தாமரைப் பூவை இறைவனுக்கு பூஜைப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் தாமரை பெண்களின் முகத்திற்கு ஒப்பிடப்படுகின்றது. இன்று உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப் பெற்று வருகிறது. இத்தகைய மருத்துவக் குணம் கொண்ட மலர்களில் தாமரையும் ஒன்று. தாமரை மலர் நம் இந்தியாவின் தேசிய மலராகும்.
தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம் . இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா என்பதாகும். தாமரை மலர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தாமரை மலர்களில் லினோலிக் அமிலம், புரோட்டீன், பாஸ்பரஸ், இரும்புசத்து, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகின்றன.தாமரை தண்டுகள் நார்சத்து நிரம்பியவை விட்டமின் சி பொட்டசியம் பாஸ்பராஸ் விட்டமின் B 6 தாமிர சத்து இவைகளுடன் மாங்கனீஸ்இவைகள் அடங்கியது .இதில் மிக முக்கியமானது இதில் சக்கரையும் கொழுப்பும் சிறிது கூட இல்லை.
இதன் மேல் தோலை சீவிவிட்டு மெல்லிய வட்டங்களாக நறுக்கி கழுவி பயன்படுத்தவும்..இதன் தண்டை பச்சையாகவே சாப்பிட்டால் கூட நன்றாகயிருக்கும்.இதயத்தை வலுவாக்கும்
உப்பு எப்படிதான் போட்டாலும் தண்டில் ஏறாது, எந்த தாமரை எந்த தண்ணீரில் இருந்தாலும் மாசுபடுவதில்லை .அதேப் போல் சமைக்கும் போதும் அதில் உப்பு ஏறுவதில்லை.
தாமரை மலர்களின் இதழ்களை நிழலில் காயவைத்து அவைகளை கஷாயம் செய்து சாப்பிட்டால் இதய மைகள் கட்டுப்படும் .தாமரை மலரின் நடுவில் இருக்கும் மகரந்த பகுதியை உடைத்துப்பார்த்தால் அதனுள் விதைகள் காணப்படும் .இவைகள் மிகப்படினமாக இருக்கும் .இந்த விதைகளை உடைத்து அதில் இருக்கும் பருப்பை சாப்பிட இதய நோய் தீரும் .இதயம் பலப்படும் , சிறுநீரகங்களை வலுப்படுத்தும்.
தாமரைத் தண்டை நல்ல விளக்கில் திரியாக உபயோகிப்பார்கள் அதை திரியாக உபயோகித்தால் செல்வ வளம் பெருகும். இதன் இலை பண்டைய நாள் முதல் உணவருந்த பயன்படுத்தப்பட்டு வருகிறது .தாமரை இலையில் சாப்பிட்டாலே பல வியாதிகள் தீரும் . முக்கியமாக நரை விரைவில் வராது .
மலர்களும் மருத்துவப்பயன் கொண்டவை. இன்று உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப் பெற்று வருகிறது. இத்தகைய மருத்துவக் குணம் கொண்ட மலர்களில் தாமரையும் ஒன்று தாமரை மலர் நம் இந்தியாவின் தேசிய மலராகும். தாமரையில் கல்விக்கு உரிய சரஸ்வதியும், செல்வத்துக்கு உரிய மஹாலட்சுமியும் அமர்ந்திருப்பதாக இந்து மதத்தினர் நம்புகின்றனர். தாமரைப் பூவை இறைவனுக்கு பூஜைப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.
தாமரைப் பூவை அரவிந்தம், பொன்மனை, கமலம், சரோகம், கோகனம், சலசம், வாரிசம், பங்கசம், நளினம், சரோருகம் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
தாமரையில் வெண்மை, சிவப்பு, நீலம், மஞ்சள் என பல வகைகள் உண்டு.
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள்:
ஈரலைப் பற்றிமிக ஏறுகின்ற வெப்பமும்போங்
கோர மருந்தின் கொடுமையறும்-பாருலகில்
தண்டா மணத்தையுள்ள தாழ்குழலே! காந்தல்விடும்
வெண்டா மரைப்பூவால் விள்
-அகத்தியர் குணவாகடம்
வெண் தாமரைப்பூ:
1. வெப்பத்தால் ஏற்படும் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், போன்ற கண் நோய்களுக்கு தாமரைப்பூவின் இதழ்கள் பயன்படுகின்றன. பசும்பால் 100 மில்லி, சுத்தமான தண்ணீர் 100 மி.லி. சேர்த்து, அதில் தாமரை பூவிதழ்களை போட்டு காய்ச்சவும். நன்றாக காய்ந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி, வரும் ஆவியை பாதிக்கப்பட்ட கண்ணில் படும்படி செய்ய வேண்டும். இதை காலை, மாலை, இருவேளை செய்து வந்தால் கண்குறைபாடுகள் நீங்கும். இதற்கு செந்தாமரை பூவையும் பயன்படுத்தலாம்.
தாமரைப்பூ அதன் இலை, தண்டு கிழங்கு இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்து, அரைத்து (வகைக்கு 100மில்லி அளவு) சாறுகளை சேகரித்து கொள்ளவும். இத்துடன் சுத்தமான நல்லெண்ணை (750 கிராம்) கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். எண்ணை கொதித்து காய்ந்தபிறகு, சிவப்பு நிறமடையும். நல்ல நறுமணம், எண்ணையிலிருந்து எழும். இந்த பக்குவ நிலையில் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து வடிகட்டி, பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும். இந்த தைலத்தை எண்ணை ஸ்நானத்திற்கு, தலையில் தடவி வாரம் ஒரு முறை குளித்து வந்தால் கண் பார்வை சீராகும்.
2. சித்தவைத்தியம் சொல்கிறது - வெண் தாமரை பூவால் ஈரலின் வெப்பமும், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடும் நீங்கும். தாமரை விதை ஆண்மையை பெருக்கும். கிழங்கு கண் ஒளி, குளிர்ச்சி இவற்றைத் தரும் விதைகளை பொடித்து 1 - 2 கிராம் எடை உள்ளுக்கு கொடுத்து வர உடலுக்கு வலிமை தரும். விதைகளை தேன் விட்டரைத்து நாக்கில் தடவ, வாந்தி, விக்கல், நிற்கும்.வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்.
3. வெண் தாமரைப்பூ ஒன்றின் இதழ்களை, பழைய மண் பாண்டத்தில் போட்டு அதில் 200 மி.லி. நீரை ஊற்றவும். அடுப்பில் வைத்து, நீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பிறகு இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். இந்த குடிநீரை வேளைக்கு 3 அவுன்ஸ் வீதம் தினமும் 3 வேளை குடித்து வந்தால் மூளை பலம் பெறும். அதன் செயல்பாடு சிறப்பாகும்.
4. மேற்சொன்னது போல், தயாரித்த தாமரை குடிநீரில் பால், சர்க்கரை சேர்த்து, பருக, இருதய நோய்கள் அகலும். தினம் இருவேளை 3 வாரங்கள் சாப்பிட வேண்டும். ஜுரத்திற்கும் இந்த தாமரை குடிநீர் நல்லது.
செந்தாமரைப்பூ:
வெண் தாமரைப்பூவை பயன்படுத்து வது போலவே, செந்தாமரைப்பூவையும் பயன் படுத்தலாம். செந்தாமரைப்பூ லேகியம் கண்ணுக்கும், மூளைக்கும் சிறந்த டானிக். செந்தாமரைப்பூ இதழ்கள், சீந்தில் கொடி, நெல்லிமுள்ளி, காசினி கீரை, சுக்கு, திப்பிலி இவற்றை பாலில் கொதிக்கவைத்து நெய் சேர்த்து செய்யப்படுகிறது. இந்த லேகியம்
.
ஆசியாவின் பல தேசங்களில் தாமரை தண்டு காய்கறியாக பயனாகிறது. ஸ்டார்சாக அரைக்கப்படுகிறது. விதைகள் கூட ஸ்டார்ச், நிறைந்து இருப்பதால், ஸ்டார்ச் தயாரிக்க பயனாகிறது. இலைகளும் வேகவைத்து காய்கறியாக பயனாகின்றன.
தாமரை குளத்து நீர் இரத்தக் கொதிப்பை தணிக்கும். கண் எரிச்சலை போக்கும். கண் எரிச்சலுடையவர்கள் காலை மாலை தாமரைக் குளத்து நீரை பருகி வரலாம்.
தாமரையின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து பனை வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். பித்தத்தைக் குறைக்கும்.
நீர்ச்சுருக்கு, நீர்த்தாரை எரிச்சல் போன்றவற்றைப் போக்கும்.
சுரக் காய்ச்சலுக்கும் இதனைக் கொடுத்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும்.
ஞாபக சக்தியைத் தூண்டும். மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும்.
வயிற்றுப் புண்ணை ஆற்றும். சரும எரிச்சலைப் போக்கும்.
இதயத்தைப் பாதுகாக்கும். இதய தசைகளை வலுப்படுத்தும். இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.
தாமரைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், இருமல், அதிக உதிரப் போக்கு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும்.
வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்.
தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவுபெறும். காது கேளாமை நீங்கும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.
மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை உண்டானால் அது பலவகைகளில் பாதிப்பை உண்டுபண்ணும். அப்பாதிப்புகளைக் குறைக்க தாமரைப்பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து குடிநீராக தினமும் அரை டம்ளர் அளவு அருந்தி வந்தால் ஒவ்வாமையால் உண்டான பாதிப்பு குறையும்.
தாமரை விதையை தேன் விட்டு அரைத்து நாக்கில் தடவினால், விக்கல், வாந்தி நிற்கும்.
சித்தவைதியத்தை விட தாமரை ஆயுர்வேதத்தில் மிகுதியாக பயன்படுத்தப்படுகிறது. அது என்னவோ உலகம் முழுவதும் எல்லா மதத்திலேயும் தாமரை ஒரு ஆன்மீக மலராகத்தான் மதிக்கபடுகிறது .சீனாவில் நீரிருக்கும் குளம் குட்டைகளிலெல்லாம் வளரக் கூடிய தாமரை மழைக்காலத்தில் அறுவடை செய்யப்படும். இதன் வேர் கிழங்கைப் போன்றிருக்கும். மாவுச்சத்து, அமீனோ அமிலங்கள், நூண்ணுயிர்ச்சத்து, புரதம் போன்ற அனைத்தும் அடங்கிய சத்துமிக்க வேரை உணவாகக் கொள்கின்றனர். தென்சீனத்தில், பறித்ததும் வெடுக்கென்றிருக்கும் பசுமையான நிலையில் பழத்தைப் போலச் சுவைத்துண்கிறார்கள். வடக்கிலோ காய வைத்து பல்வேறு உணவுப் பதார்த்தங்களில் பயன்படுத்துகிறார்கள். தாமரை வேரிலிருக்கும் துளைகளில், பாதி வெந்த அரிசிச் சோற்றை அடைத்து ஆவியில் அவித்தெடுக்கிறார்கள். பின்னர், துண்டுகளாக வெட்டி சர்க்கரை சேர்த்துப் பரிமாறுகிறார்கள். தாமரை மணத்துடன் இனிப்பாக இருக்கும் இந்தப் பதார்த்தம் சீனத்தில் மிகவும் பிரபலம்.
செந்தாமரை, வெண்தாமரை என இருவகை தாமரை மலர்கள் இருந்தாலும் வெண்தாமரையே அதிக அளவில் மருத்துவத்திற்குப் பயன் படுத்தப்படுகிறது.
மூளை வளர்ச்சி
உடல் ஆரோக்கியத்திற்கு வெண்தாமரைக்குடிநீர் மிகவும் ஏற்றது. மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து வெண்தாமரைப் பூ கஷாயம் குடித்து வர மூளை வளர்ச்சியடையும். இதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களை போக்க வெண்தாமரைப் பூ கஷாயம் ஏற்றது. தினம் மூன்று வேளை வெண்தாமரை பூ கஷாயம் சாப்பிட ஜன்னி நோய் குணமாகும்.
கண்பார்வை தெளிவு
வெண்தாமரைப்பூ,இலை,தண்டு, கிழங்கு ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து எடுத்து அதனை நன்றாக சாறுபிழிந்து முக்கால்கிலோ நல்லெண்ணையில் கலந்து அடுப்பில் கொதிக்கவைக்கவும். நன்றாக கொதித்த உடன் அதனை இறக்கி ஆறவைத்து காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும். தினமும் இதனை தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்துவர மங்கிய கண்பார்வை தெளிவுறும்.
உயர் ரத்த அழுத்தம்
வெண்தாமரைப்பூக்களைப் காயப்போட்டு பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவேண்டும். அதனை வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு தடவை சாப்பிட உயர் ரத்த அழுத்தம் சீராகும்.
கூந்தல் தைலம்
தாமரைப்பூ ,அதிமதுரம்,நெல்லிக்காய், மருதாணிஇலை ஆகியவற்றை சமஅளவு எடுத்து பால்விட்டு அரைத்து உருட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் விட்டு இந்த உருண்டையை அதில் போட்டு காய்ச்சி வடித்து எடுக்கவும். இந்த தைலத்தை தினமும் தலையில் பூசி வர இளநரை மறையும், கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.
இருதயநோய் போக்கும்
செந்தாமரை இதழ்களை எடுத்து வெயிலில் உலர்த்தி 300 கிராம் எடை எடுத்து ஒரு சட்டியில் போட்டு அதில் மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி மூடிவைத்து விடவும். இந்த கஷாயத்தை தினமும் அரை டம்ளர் அளவு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவு தேன்விட்டு 21 குடித்து வர இருதய நோய் குணமடையும்.
இருமல் போக்கும் நீர்
தினமும் செந்தாமரை இதழை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதனை பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு அதனை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் குடித்து வர வறட்டு இருமல் குணமடையும்.
தாமரை இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, பாலில் கலந்து குடித்துவர ஞாபகசக்தி அதிகரிக்கும்.
வெண்தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி ஒரு கிலோ அளவு எடுத்து 3 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊறப் போட்டு மறுநாள் அதை அடுப்பில் வைத்து 1 லிட்டர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி, சர்க்கரை 1 கிலோ கலந்து தேன் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு 15 மில்லி எடுத்து வெந்நீரில் கலந்து 2 வேளை குடித்து வந்தால் உடல் சூடு தனியும்.
தாமரைப் பூவின் மருத்துவப் பயன்களை நாமும் அறிந்து அதன் முழுப் பயனையும் பெற்று நீண்ட ஆரோக்கியம்பெறும்வோம்.
படம் இரண்டு: தாமரை விதை மாலை

நான் பார்த்த மூலிகை பதிவுகள்

Saturday, 24 February 2018

மூட்டு வலிக்கு எளிய நிவாரணம்

மூட்டு வலிக்கு எளிய நிவாரணம்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலைப் பார்ப்பது, அதிக தூரம் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது, எடை அதிகமான பொருட்களை அடிக்கடி தூக்குவது என இப்படிப்பட்ட வேலைகளால் பலருக்கும்..... இப்படி எதுவும் செய்யாமலே கூடவும் இப்போதெல்லாம் இடுப்பு வலி (lower back pain), குறுக்கு வலி, கீல்வாதம் (Sciatica ) போன்ற வலிகள் மனிதனின் அன்றாட வாழ்வில் பெரும் தொல்லையாகவே இருந்து வருகிறது.
மேற்சொன்ன காரணங்கள் எதுவுமே இல்லாமல் சிலருக்கு எப்போதும் இந்த வலியால் பாதிக்கப்படுவர். பொதுவாக இப்போது இந்த வலியால் அவதிப்படாதவர்களே யாருமே இல்லை எனலாம்.
இதற்கு தீர்வாக அனைவரும் வீட்டிலையே செய்து கொள்ள எளிமையான வழி ஒன்றை படத்துடன் விளக்கியுள்ளேன். பயமும் இல்லை. பக்க விளைவுகளும் இல்லை. முயற்சி செய்து தான் பாருங்களேன்.
சமமான தரையில் படுத்துக் கொண்டு, இடுப்பின் கீழ் பகுதியில் (lower back) இரண்டு கை விரல்களையும் இறுக மூடி மடித்து ஒரு நிமிடத்திற்கு வைத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு பக்கமாக ஒருக்களித்து நம்முடைய மூடிய கையை (அ) டென்னிஸ் பந்தை படத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில் வைத்து பத்து நிமிடங்கள் அமைதியாக கண்ணை மூடி மூச்சை மெதுவாக இழுத்து விட வேண்டும். அதன் பிறகு அடுத்த பக்கமாக ஒருக்களித்து படுத்து முன்பு செய்தது போலவே செய்யவும் (இடது மற்றும் வலது புறம் மாறி மாறி ) இப்படி செய்தால் உடனே வலியில் இருந்து மீள முடியும்.
நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் இதனுடன் மேலும் சில புள்ளிகளை நம் கையால் அழுத்தம் கொடுக்க வேண்டும்.அக்குபஞ்சர் அறிவோம்   

கோதுமைபுல் பலன்கள்

* * * * * * * * * * * * * * * * *
சர்க்கரை வியாதிக்காரங்களும், சர்க்கரை வியாதி வந்திடுமோன்னு பயப்படறவங்களும் தங்களோட மெனுல இப்போ சப்பாத்தியை கட்டாயமாக்கிட்டாங்க. சப்பாத்தி-கஞ்சி-கூழ் என கோதுமையோட உபயோகம் நமக்கு இவ்ளோதான் தெரியும்.
அத தாண்டி ஒரு அற்புதமான விஷயம் இந்த கோதுமை புல்.
ஆமாங்க நம்மூர்ல அருகம்புல் சாறு குடிக்கிறது மாதிரி இந்த கோதுமை புல் சாறு வடநாட்ல ரொம்ப பிரபலம். ஆனா நம்மூர் பக்கம் இப்போதான் பெரிய மால்கள்ல கோதுமைபுல் ஜூஸ் விக்க ஆரம்பிச்சு இருக்காங்க. கொஞ்சம் கொஞ்சமா மக்களுக்கு இப்பத்தான் இது பத்தின அருமைகள் தெரிய ஆரம்பிச்சிருக்கு.
கோதுமை புல் சாறுல என்னென்ன சத்துக்கள் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா!!!
இது ஒரு புல் வகையைச் சேர்ந்தது. ஆனால் செடி முழுசுமே மருந்தாகும். நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, மக்னீசியம், அமினோ அமிலம், விட்டமின் – B1, B2, A, B 1, 2, 3, 5, 6, 8 & 12 C, E & K மற்றும் நியாசின் இப்படி பலவிதமான சத்துக்களை உள்ளடக்கியது.
சரி இதனால என்ன பலன்?
1. இரத்தத்தை சுத்தம் செய்யும். உடலில் ஹீமோகுளோபின் அளவை சீராக்கும்.
2. நீண்டகாலமாக மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு கல்லீரல் மற்றும் இரத்தத்தில் சேர்ந்திருக்கும் நச்சு கழிவுகளை வெளியேற்றும்.
3. பெருங்குடலை சுத்தம் செய்யும்.
4. மலச்சிக்கலை போக்கும்.
5. உயர் இரத்த அழுத்தம் குறைய உதவி செய்யும்.
6. முகப்பரு மற்றும் உடலில் இருக்கும் கரும்புள்ளிகள், வடுக்கள் மறைய உதவும்.
7. உடலில் ஆக்ஜிஸன் அளவை சமன்படுத்தும்.
8. இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் உடல் சோர்வு, பாத எரிச்சல், குத்தல் போன்றவற்றை சரிசெய்யும்.
9. நரைமுடி 50 வயதுவரை வராது. இளமையாக வாழ விரும்புபவர்கள் கோதுமைபுல் சாறு (அ) பொடியை தொடர்ந்து எடுக்கலாம்.
10. அதிகப்படியான கொழுப்பு உடலில் கூடுவதை தடுப்பதோடு, செரிமாணத்தை சீர்படுத்தும்.
11. சிறுநீரக சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அதாவது சிறுநீரக பாதையில் உண்டாகும் தொற்று, விரைவீக்கம், சிறுநீரக கற்கள், அடிக்கடி சிறுநீர் கழித்தல்(அ)போன்ற உணர்வு இவற்றிலிருந்து விடுபட பேருதவி புரியும்.
12. சுவாசமண்டலத்தை சீராக்கும். நுரையீரல் தொற்று, சளி, இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல், தொண்டை வலி இவற்றிலிருந்து காப்பாற்றும்.
13. ஆரம்ப கால நிலையில் உள்ள முட்டிவலிகளை குணமாக்கும்.
14. ஹீமோகுளோபின் குறைபாட்டினால் அவதியுறும் குழந்தைகளுக்கு (Beta Thalessemia என்கிற வியாதி) தொடர்ந்து 18மாதங்களுக்கு கோதுமைபுல் சாறை காலை வெறும் வயிற்றில் கொடுத்துவர அந்த வியாதியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.
15.இந்த சாற்றை கொப்புளித்தால் தொண்டை புண் சீக்கிரமே ஆறும். தொண்டை கரகரப்புக்கு நீங்க “கிச் கிச்” மாத்திரை எல்லாம் எடுக்க வேண்டாம். சிலருக்கு பல் ஈறுல வீக்கம் ஏற்பட்டு இரத்தம் கசியும். சீழ் வரும். இதை இந்த கோதுமை சாறு குணமாக்கும்.
16. வெண்புள்ளி, தேமல் மற்றும் சொரியாஸிஸ் போன்ற சரும வியாதிகள் குணமாகும்.
17. இதெல்லாம் விட ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்....கேன்சர் நோய் உள்ளவங்க இந்த சாற்றை(அ)பொடியை தொடர்ந்து எடுத்து வந்தா கேன்சர் செல்கள் அழியும். கேன்சர் செல்கள் உருவாகாமல் தடுக்கும்.
என்னது...இதுல இவ்ளோ சக்தி இருக்கா...இந்த புல் எங்க கிடைக்கும். கோதுமை பஞ்சாப்ல, ஹரியானால தானே விளையுதுன்னு சொல்வாங்க. அப்போ நாம அங்கதான் போகணுமா??
அதெல்லாம் எங்கயும் போக வேணாம். உங்க வீட்ல நீங்களே விதைக்கலாம். உடனே யோசிக்காம “எங்களுக்கு விவசாய நிலம் கிடையாதே”ன்னு சொல்லாதீங்க. நாம என்ன கோதுமை அறுவடை பண்ணி கடைங்களுக்கு சப்ளையா செய்ய போறோம். இப்போ ஒரு கிலோ கோதுமை வாங்கலாம். ஒரு பத்து பிளாஸ்டிக் ட்ரே (அ) ஸ்வீட் பாக்ஸ் (அ) சின்ன மண்தொட்டிகள் வாங்கலாம்.
அதுல கொஞ்சம் மண்ணும், எருவும் கலந்து நிரப்பி வைச்சுக்கலாம். வாங்கிட்டு வந்த கோதுமைல ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஏழெட்டு மணி நேரம் ஊற வச்சு, அப்புறம் அத ஒரு துணில கட்டி லேசா காத்தாட விடலாம். மறுநாள் பார்த்தீங்கன்னா அந்த கோதுமை விதைகள் முளை விட்டிருக்கும். நாம ஏற்கெனவே ரெடி பண்ணி வச்சிருக்க டிரே, மண்தொட்டியில இந்த முளைத்த கோதுமையை தூவி அப்படியே மேலயும் கொஞ்சம் மண்ணை தூவி ஒரு நாளைக்கு ஒரு முறை தண்ணி தெளிச்சா அழகா முளைச்சு வரும். இப்படி இரண்டு நாளைக்கு ஒரு ட்ரேன்னு, பத்து ட்ரேல ரெடி பண்ணிக்கலாம் சத்தான கோதுமைபுல்லை.
ஒரு மூணு – நாலு இன்ச் அளவு வளர்ந்த கோதுமை பயிரை கத்தரித்து எடுத்து அதை மிக்சியில் போட்டு தண்ணீர் ஊற்றி நல்லா அடிச்சு வடிகட்டி குடிக்கணும். இதான் கோதுமைபுல் ஜூஸ். எப்போ வேணும்னாலும் குடிக்கலாம்.
வெறும் வயித்துல குடிச்சா பலன் அதிகம்.
இப்படியெல்லாம் தொட்டில கோதுமைபுல் வளர்க்க முடியாதுன்னு சொன்னீங்கன்னா உங்க பக்கத்துல இருக்க ஆர்கானிக் கடைங்கள்ல வாங்கிக்கலாம்.
இயற்கை ஆர்வலர்கள் சிலர் நல்ல தரமான கோதுமைபுல் பொடி மக்களுக்கு அதிக அளவில் போய் சேரணும்ங்கற நல்லெண்ணத்தில கடைங்கள்ல கிடைக்கிற விலையை விட குறைவான விலையில், இலாப நோக்கமில்லாமல் 100கிராம் 250 ரூபாய்க்கு தந்துகிட்டு இருக்காங்க.
நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான சத்துக்கள் நிறைஞ்ச கோதுமைபுல்ல இனி நாம தவற விடவே கூடாது. கோதுமை புல் குடிக்கறோம். ஆரோக்கியமா வாழறோம். ஆரோக்கிய பாரதத்தை உருவாக்குவோம்.           

*படித்ததை பகிர்கிறேன்*

*மஞ்சள் காமாலைக்கு ஒரு வேளை மருந்து:*

ஒரு வேளை மருந்தில் குணமான அதிசயம்
நமது தமிழ்நாட்டு பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்த நிகழ்வு இது.
உங்களுக்கு,உங்கள் நண்பர்களுக்கோ
இது அவசியம் பயன் படும்.
சென்ற ஆண்டு எனது மகன் பள்ளி இறுதிப் படிப்பிற்காணத் தேர்வை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.
ஒரு நாள் கடுமையான சுரம் வந்தது.
அது சாதாரண சளி சுரமாக இருக்கும் என சிகிச்சை தந்தேன்.
ஆனால் சுரம் விடாமல் இரண்டு நாள் நீடித்தது.தொடர் சிகிச்சை தந்ததில் சுரம் விட்டு விட்டது.
ஆனால் பையன் உணவு சாப்பிடவில்லை. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்தான்.தண்ணீர் குடித்தாலும் வாந்தி எடுத்தான்.
சந்தேகப்பட்டு கண்ணைப் பார்த்ததில் மஞ்சள் நிறம் தெரிந்தது.
எனவே இரத்தம்.,சிறுநீர் பரிசோதனை செய்துவிடலாம் என அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பித்தேன்.
அவர் பரிசோதனை செய்துப் பார்த்து விட்டு,மஞ்சள் காமாலை அதிகமாக உள்ளது.ஆஸ்பிட்டலில் தங்கவேண்டும்.தொடர்சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.ஆறுமாதமாவது மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.என பயமுறுத்திவிட்டார்.
மருத்துவம் குறித்த புரிதல் உள்ளவனாதலால்,சரி நாளை வருகிறேன் எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன்.
கிராமப்புரங்களில் மூலிகை மருந்துக் கொடுத்து அதை எளிதில் குணப்படுத்திவிடுவார்கள்.
மேலும்,மஞ்சள் கரிசலாங்கண்ணி ,கீழாநெல்லி இரண்டும் சிறந்த மருந்து என்பதும் தெரியும்.இரண்டு மூலிகையும் எங்கள் கிராமப்புறங்களில் எளிதில் கிடைப்பதுதான்.
இரண்டுநாளாக தண்ணீர் கூட வயிற்றில் நிற்காததால் பையன் மிகவும் சோர்ந்துவிட்டான்.
அப்போது ஒரு நண்பர்,விழுப்புரம் அருகே கெங்கராயம் பாளையம் என்ற ஊரில்,
இதற்கு ஒரேவேளை மருந்தில் குணமாக்குகிறார்கள் எனச் சொன்னார்.
பின்னும் இரண்டு நபர்கள் அதை உறுதிப் படுத்தினர்.
அன்றே பையனை அழைத்துக் கொண்டு அந்த ஊருக்குச் சென்றேன்.
மனசுக்கு மிகவும் கவலையாக இருந்தது.எதுவும் சாப்பிட முடியாதநிலையில் பையன்.
அங்குச் சென்றவுடன்,அந்த மருத்தவர் வீட்டை அடைந்தால் நூறு பேருக்கு மேல் அமர்ந்துள்ளார்கள்.தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்தனர்.ஒரு சிலர் பெங்களூரிலிருந்தும் வந்திருந்தனர்.அந்தளவு அந்த மருத்துவரின் பேர் பரவியுள்ளது.
மஞ்சள் காமாலை க்கு மட்டும் மருத்துவம் பார்க்கிறார்.
நோய் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.எல்லோர் முகத்திலும் நம்பிக்கை.
எல்லோரையும் வரிசையாக அமரவைத்துவிட்டு,சாதம் பொங்கி அதில் வெல்லம் கலந்து.,ஒரு சிட்டிகை மருந்தும் கலந்து கையில் ஒரு உருண்டை தந்து விழுங்கச் சொல்கிறார்கள்.அது இனிப்பாக இருப்பதால் எல்லோரும் விருப்பமுடன் உண்டு விடுகின்றனர்.
நாளையிலிந்து நோய் இறங்க ஆரம்பித்துவிடும்.ஐந்து நாளில் நார்மலாகிவிடுவார்.அதுவரை கீரைவகைகளை மட்டும் தினம் உணவில் சேர்க்கவும்,எனவும்
இதிலேயே சரியாகிவிடும் மீண்டும் வரவேண்டாம் எனச் சொல்லி அனுப்பி
விடுகின்றனர்.பெரியவர்களுக்கு மட்டும் சாராயம் அருந்தக்கூடாது என்றக் கண்டிப்பு.வேறு பத்தியமில்லை
வழக்கமான உணவு உண்ணலாம்.
என் பையனுக்கு மருந்தைக் கொடுத்துவிட்டு,அழைத்து வந்தேன் அடுத்த அரைமணிநேரத்தில் தண்ணீர்
வேண்டும் எனக்கேட்டான்.பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன் கால் பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டான்.வாந்தி எடுக்கவில்லை.வீடு வருவதற்குள் பசிக்கிறது என்றான்.ஓட்டலில் இரண்டு இட்லி வாங்கித் தந்தேன்.சாப்பிட்டுவிட்டான்.நான்கு நாளாக சரியாக சாப்பிடாதப் பிள்ளை சாப்பிட்டதும் எனக்கு சந்தோசம்.
பையன் முகத்தில் ஒருத் தெளிவு.
மருந் துக் கொடுத்த மூன்று மணிநேரத்திற்குள் இவ்வளவு மாற்றம்.
அன்று இரவு,மறுநாள் என பையன் உணவினை சாப்பிட ஆரம்பித்தான்.மூன்றாவது நாள் சிறுநீரின் நிறம் மாறி,ஒரு வாரத்தில் பூரணகுணமாகிவிட்டடான்.
எனக்கு ஆச்சர்யம் இன்றுவரைத்தீரவில்லை.சித்தமருந்திற்கு இவ்வளவு சக்தியா.
எவ்வளவோ அபூர்வமான மருத்துவத்தை மறைத்துவைத்தே பழகிவிட்டனர்.
மருந்திற்கு வாங்கிக் கொண்டது 30ரூபாய் மட்டுமே.
பல்லாயிரம் கணக்கானோர் இன்றும் ஒரே வேளை மருந்தில் குணமாகிச் செல்கின்றனர்.
விழுப்புரம் நகரிலிருந்து
பாண்டிச் செல்லும்
வழியில் 16கிமீ தூரம்
கெங்கராயம்பாளையம் உள்ளது.
மஞ்சள்காமாலைக்கு...
வேளாங்கண்ணி தாண்டி
பறவை தெற்க்கு
பொய்கை நல்லூரில்
வைத்தியர் மாயக்கண்ணன் மருந்துதருகிறார்..!!
வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை நகரிலும் இதே மாதிரி மூலிகை மருந்து 75 ஆண்டுகளுக்கு மேலாக தலைமுறை, தலைமுறையாக கொடுக்கிறார்கள். சென்னை-வேலூர் பஸ் ரூட்டில் சென்னையில் இருந்து 110 கிமீ தொலைவில் வாலாஜா உள்ளது

மூல நோயாளிகள் கவனத்திற்கு!!!

மூல நோயாளிகள் கவனத்திற்கு!!!

புளி, புகையிலை, அகத்தி, வாதநாரயணி இலை, பாகற்காய், பூசணிக்காய், கோழி இறைச்சி உண்ண கூடாது. மேலும் போதை பொருட்கள், மது மற்றும் அதிகப்படியான வெய்யிலில் வேலை பார்ப்பது, இரவில் கண்விழிப்பது, பகலில் தூங்குவது என இத்தனையும் தவிர்க்க வேண்டும்.
கடுமையான பேதி மருந்து எடுக்க கூடாது.
பகல் உணவில் நெய், மோர் சேர்த்து கொள்வது, தாகத்திற்கு மோர் மற்றும் பழரசம், இரவில் பசும்பால் அருந்துதல் நலம் பயக்கும்.
உணவுமுறைகள் மற்றும் முறையான மருத்துவம் மூலம் எளிமையான முறையில் மலச்சிக்கல், மூலம் போன்ற பிரச்சனைகளில் இருந்து வெளி வரலாம்.   

சுகர் புண் மற்றும் ஆறாத புண்கள்!

ஆவாரம் பூ, இலை ஒரு கைப்பிடி எடுத்து நன்கு மை போல அரைத்து அதிலிருந்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை வெறும் வயிற்றில் மோரில் கலந்து குடிக்க வேண்டும். மீதி விழுதை ஒரு கரண்டியில் விளக்கெண்ணெய் சேர்த்து சிறுதனலில் வதக்கி ஆற வைத்து சுகர் புண் மற்றும் ஆறாத புண்கள் மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும்.
இம்முறையால் ஆறாத புண்களும் ஒரு சில நாட்களில் ஆறிவிடும்.            

முட்டிவலி! தோள் பட்டை வலி!

உடல் எடை கூடினால் முட்டிவலி, அதிக தூரம் டூவீலர் ஓட்டினால் இடுப்பு வலி(back pain), பெண்களில் பலருக்கு வலது தோள் பட்டை வலி.
இப்படி வலிகளால் அவதிப்படுபவர்களா நீங்கள்??? வலி நீங்க இதோ ஒரு எளிய வழி.
இரண்டு கைப்பிடியளவு முடக்கறுத்தான் கீரையை மை போல அரைத்து அதிலிருந்து நெல்லிக்காய் அளவு எடுத்து மோருடன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மீதி விழுதை உளுந்து மாவு அல்லது முட்டையின் வெள்ளை கருவுடன் கலந்து உடலில் வலியுள்ள பாகத்தில் பற்று இட வேண்டும்.
வலி குறையும் வரை இம்முறையை பின்பற்றலாம். பக்கவிளைவுகள் இன்றி வலிகள் எல்லாம் காணாமல் போகும்.   

இட்லி!!!

கைகுத்தல் அரிசியுடன், தோல் உளுந்து கொண்டு செய்யப்பட்டால் அது இட்லி.
பாலீஷ் செய்யப்பட்ட அரிசி மற்றும் தோல் நீக்கிய உளுந்து கொண்டு செய்யப்பட்டால் அது போலி இட்லி.
கைக்குத்தல் அரிசி, தோல் உளுந்தால் ஆன இட்லி சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை கூடாது. சுகர், பிபி நெருங்காது.
கூடுதல் தகவல்:
தோல் உளுந்தை இரவு ஊற வைத்து காலையில் வடிகட்டி முளைகட்ட விட்டு பின்பு அரைத்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் 300 மடங்கு அதிகமாகுமாம். இந்த தகவல் கூட நாம் அதிகமாக நம்பும் நவீன விஞ்ஞானம் தான் சொல்கிறது.            

உடல் எடை குறைய!!!

உடல் எடை குறைவதுடன் உடலும் வலுவடைய இரண்டு குறிப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவரவர் வசதிப்படி இதில் ஏதாவது ஒரு குறிப்பை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
1. வேப்பிலை, வில்வம், துளசி, அருகம்புல் பொடி சம அளவு எடுத்து கலந்து வைத்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் அளவு தேனில் குழைத்து இருவேளை சாப்பிட உடல் எடை குறையும்.
2. தினசரி காலை, இரவு சாப்பாட்டுக்கு முன்பு
ஒரு ஸ்பூன் கொள்ளு,
ஒரு ஸ்பூன் எள்ளு
ஒரு ஸ்பூன் ஒமம்
இரண்டு டம்ளர் தண்ணீரில் கலந்து ஒரு
டம்ளர் அளவு கொதிக்க
வைத்து வடிகட்டி குடிக்கவும். உடலில் உள்ள கெட்ட
கொழுப்பு கரைந்து கணையம், கல்லீரல் வலுப்பெறும். உடல் எடையும் குறையும்.      

நூறாண்டு வாழ வேண்டுமா???

சிவகரந்தை!!!
ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆனால் அப்படி வாழ முடியவில்லை என்பதே நிதர்சனம்.
சிவகரந்தை எனும் அரிய வகை மூலிகை மனித உடலுக்கு முழு ஆரோக்கியத்தை தருவதுடன் இன்னும் பலபடிகள் உயர்ந்த நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் மிகக் குறைந்த செலவில்!
சிவகரந்தையை எப்படியெல்லாம் நம் உடலை பலப்படுத்தும் என்பதை பார்க்கலாம் வாங்க.
சிவகரந்தை சூரணத்தை(பொடியை) 5கிராம் அளவுக்கு(ஒரு டீஸ்பூன்) நெய், பால், தேன் ஏதாவது ஒன்றில் கலந்து உண்டு வர
1. ஒரு மாதத்தில் உடல் நாற்றம் நீங்கும்.
2. இரண்டு மாதங்களில் வாதம் நீங்கும்.
3. மூன்று மாதங்களில் பித்தம் நீங்கும்.
4. நான்கு மாதங்களில் குட்ட நோய்கள் நீங்கும்.
5. ஐந்து மாதங்களில் உடல் வெப்பம் நீங்கும்.
6. ஆறு மாதங்களில் ஞானம் அதிகம் உண்டாகும்.
7. ஏழு மாதங்களில் உடல் பொன் போல் ஆகும்.
8. எட்டு மாதங்களில் உடல் சட்டை போகும். அதாவது உடலில் உள்ள மலங்கள்(கழிவுகள்) நீங்கும். 9. ஒன்பதாம் மாதத்தில் ககனம் செய்ய (விண்வெளியில் செல்லும்) வல்லமை உண்டாகும்.
கூடுதல் தகவல் கேன்சர் வராமல் தடுக்கும். வந்தவர்களுக்கு சிவகரந்தை லேகியம் ஒன்றே மருந்தாகும்.
நம் சித்தர்கள் அருளிச் சென்ற இம் மூலிகை பற்றிய அரிய மருத்துவ குறிப்புகள் நம்மை வியப்பின் உச்சத்திற்கே அழைத்து செல்கிறதே! இவ்வளவு அரிய மருத்துவ குணங்கள் நிறைந்த
சிவகரந்தை சூரணத்தை உட்கொள்ளும் அனைவருக்கும் மேற்கூறிய அனைத்தும் கைகூடும் என்பதில் ஐயமில்லை.
குறிப்பு: இச்செடியின் இலை முதல் வேர் வரை அனைத்து
பகுதிகளும் நிழலில் உலர்த்தி சூரணம் செய்து கொள்ள வேண்டும். முடிந்தவர்கள் தானே செய்து கொள்ளலாம். இதில் ரகசியம் ஏதுமில்லை.

மலச்சிக்கல் மற்றும் மூலம் வியாதி!!!

மலச்சிக்கல் மற்றும் மூலம் வியாதியால் அவதியுறுபவர்கள் பிரண்டையை நெய்யில் வதக்கி அரைத்து கொட்டைப்பாக்களவு காலை, மாலை இரண்டு வேளை என மூன்று நாட்கள் மட்டும் எடுத்தால் போதும். எளிய முறையில் தீர்வு கிடைக்கும்.   

கீரை, வாழைப்பழம், ஆப்பிள், எலுமிச்சை ஜூஸ்!!!!

கீரைகள் எப்போதுமே நம் உடலுக்கு நலம் பயக்கும் என்றாலும் அதை சமைக்கும்போது அதிலிருக்கும் நிறைய சத்துக்கள் வீணாவதோடு, முழுமையாய் நமக்கு கிடைப்பதில்லை என்பது உண்மை.
மேலும் அதிலிருக்கும் பச்சையம் வேக வைத்ததும் அதன் சக்தியை ஓரளவுக்கு இழந்துவிடுகிறது.
அப்படியானால் கீரைகளின் சக்தியை முழுமையாய் பெற முடியாதா? நிச்சயம் முடியும். புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை, தூதுவளை, முடக்கறுத்தான், பசலை, மணத்தக்காளி, முருங்கை இப்படி ஏதாவது ஒரு கீரையை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து நன்கு அலசியபின், அதனுடன் ஒரு வாழைப்பழம், ஒரு ஆப்பிள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு மிக்சியில் நன்கு அடித்துக்கொள்ளவும். பிறகு அதனுடன் அரைமூடி எலுமிச்சை சாறு கலக்கவும். இப்போது எந்த காரணிகளும் சிதையாத, மேலும் மெருகூட்டப்பட்ட கீரை பழச்சாறு தயார்.
இதை தொடர்ந்து குடித்து வர, உடல் நல்ல வலுவாவதோடு, அசதியும் உங்கள் பக்கமே அண்டாது. முயற்சித்து பாருங்களேன்.
குறிப்பு:- சிதைவடையாத பச்சையம் உடலின் ஆக்ஸிஜன் கிரகிக்கும் சக்தியை அதிகரிப்பதால் புற்றுநோய் அண்டாமல் இருக்க உதவும்.  

நெஞ்செரிச்சல், செரிமானமின்மை, வாயுத்தொல்லை!!!

சீரகம், ஓமம் இரண்டும் சம அளவு எடுத்து சீராக இளம்சூட்டில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
உணவுக்கு அரைமணிநேரம் முன் ஒரு டீஸ்பூன் பொடியை தண்ணீருடன் எடுத்து கொண்டு வந்தால் மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளுக்கும் தீரும்.
அனைத்து வயதினருக்கும் இது பொருந்தும்    

ஹெர்பல் டை!!!

அவுரி பொடி, மருதாணிஇலை பொடி சம அளவு தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலையில் தடவி அரைமணி நேரம் விட்டு அலசி விட வேண்டும்.
கெமிக்கல் "டை" இல்லாமலேயே அரைமணி நேரத்தில் மூலிகைகளால் தலைமுடி கருமை நிறம் அடைவதை காணலாம்.    

தூக்கமின்மை!!! (Insomnia)

இரவினில் தூக்கம் வராமல் தவிப்போருக்கான எளிய நிவாரணம்.
இரவு தூக்கம் தொலைத்து அதிக நேரம் புத்தகம் படிப்பது, மொபைல், சிஸ்டம், டிவி பார்ப்பவர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் பிரச்சினைகள் எளதில் தாக்கும்.
உடற்சோர்வு, மலச்சிக்கல், முடி உதிர்தல், கோபம், எரிச்சல் என இப்படி பல வியாதிகள் உண்டாகும். இதுவே அவர்களுக்கு பெரிய கவலையாகவும் மாறிவிடும்.
தூக்கமின்மை, மலச்சிக்கல் இரண்டுமே வியாதிகள் வருவதற்கான அறிகுறிகள்.
25 கிராம் கசகசாவை காலையில் ஊறவைத்து, இரவினில் மிக்ஸியில் நன்கு அரைத்து, இரண்டு டம்ளர் பாலில் கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு பால் சுண்டியதும் ஏலப்பொடியும், இனிப்புக்கு நாட்டுசர்க்கரை (அ) தேன் கலந்து குடிக்கலாம்.
இப்படி தொடர்ந்து பத்து நாட்கள் குடித்து வந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.     

வலியுடன் கூடிய ஆறாத சீழ் வடியும் புண், கட்டி, வலி குணமாக!!!

ஆறாத புண்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு காலில் உண்டாகும் புரையோடிய புண்களை குணப்படுத்த எளிய முறை.
கட்டியின் அளவைப் பொறுத்து தேவைப்படும் அளவு ஊமத்தை இலைகளையும், அதோடு சிறிது அரிசியையும் சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை சிறுதீயில் அடுப்பில் வைத்து களி போல் கிளற வேண்டும்.
களி பதம் வந்ததும் இறக்கி வைப்பதற்கு முன் விளக்கெண்ணெய்(castroil, ஆமணக்கு எண்ணெய்) (அ) நல்லெண்ணெய் சிறிது கலந்து கொள்ளவும்.
இளஞ்சூடாக இருக்கும் போதே களிம்பை கட்டி மீது வைத்து கட்டி வைக்க...ஒரிரு நாட்களில் கட்டி உடைந்து விடும். உடைந்த கட்டிகளும் விரைவில் பூரணமாக ஆறிவிடும்.

மிளகும்!!!காய்ச்சலும்!!!

மிளகு-1
தாய்ப்பால் -20 சொட்டு
மிளகின் மேல்தோலை சீவி எடுத்துவிட வேண்டும். சந்தனக்கல்லில் நான்கு சொட்டு தாய்ப்பால் விட்டு தோல் சீவிய மிளகை உரைத்து, அந்த விழுதை மீதி இருக்கும் தாய்ப்பாலோடு கலந்து இரண்டு கண்களிலும் 5,6 சொட்டுகள் விட....பகீரென எரியும். கண்களை திறந்து, திறந்து மூட வேண்டும்.
காய்ச்சலுடன், தலைக்கனத்துடன் படுத்திருந்த நபர் உடனே எழுந்து உட்காருவார்   


கூந்தல் கருமை பெற....

வெள்ளை கரிசாலை, கொட்டை கரந்தை இலை இரண்டையும் நிழலில் காய வைத்து பொடி செய்து ஒரு டீஸ்பூன் அளவு காலை, இரவு இரண்டு வேளையும் தேனில் கலந்து உண்டு வந்தால் இளநரை, முது நரை இரண்டும் மறைந்து கூந்தல் கருமை நிறம் அடையும்.
(சித்தர்களின் வழி தேடல்களில் இருக்கும் ஒருவர் கூற கேட்டது.)    

முகப்பொலிவுக்கு!!!

வயதால், மன இறுக்கத்தால் முகத்திலும், கழுத்திலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகம் மற்றும் கழுத்தில் தேய்த்து இருபது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வாரத்தில் மூன்று நாட்கள் என இந்த எளிய முறையைப் பின்பற்றினால் முகச்சுருக்கங்கள் நீங்கி இயற்கையான முறையில் இளமையோட வாழலாம்.
இது அனுபவமுறை. நல்ல பலன் கிடைக்கும்.    

வாயு தொல்லை நீங்க!!!

சுக்கு - 50 கிராம்
மிளகு - 50 கிராம்
திப்பிலி - 50 கிராம் 
இந்துப்பு - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்
கடுக்காய் - 50 கிராம்
பெருங்காயம் - 50 கிராம்
சாதிக்காய் - 50 கிராம்
இவை அனைத்தையும் முறைப்படி சுத்தி செய்து தனித் தனியாக மிக்ஸியில் போட்டு பொடி செய்து, பின் எல்லா பொடிகளையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தேன், மோர், வெந்நீர் இதில் ஏதாவது ஒன்றுடன் கால் டீஸ்பூன் அளவு கலந்து காலை, இரவு சாப்பிட்டு வர வாயு தொல்லை, விலா எலும்பு வலி, இடுப்பிலிருந்து மார்பு வரை வேதனை தரும் வாயு தொல்லை, மூச்சை அழுத்தி பிடிக்கும் நெஞ்சு வலி, முதலியவைகள் குணமாகும்.   

மோர்!!!

மோருண வளிமுதல் மூன்றையு மடக்கி
யாருமெய் யினைத்தின மாதரித் திடுமே - தேரையர் காப்பியம்.
மோர் தினம்தோறும் குடித்து வந்தால் உடலில் முக்குற்றங்களும்* கூடாமலும், குறையாமலும் ஒழுங்கு பெற செய்து உடலை ஒவ்வொரு ஆளும் ஆதரித்து வளர்த்து வரும்.
(முக்குற்றங்கள் - வாதம், பித்தம், கபம்) 

தீராத விக்கல்!!!

* * * * * * * * * * *
தீராத விக்கல் கூட கல்லீரல் சம்பந்தப்பட்ட வியாதிங்கறது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
உடனே இது பெரிய வியாதியான்னு பயந்துட வேணாம்.
விக்கல் நிறுத்த எளியவழி....
ஆப்ப சோடாவை (sodium bicarbonate)
ஒரு சிட்டிகை எடுத்து தேனோடு கலந்து கொடுக்க... விக்கல் உடனே நிற்கும்...   

வறட்டு மற்றும் தொடர் இருமலுக்கு

வறட்டு மற்றும் தொடர் இருமலுக்கு வீட்டில் இருக்கும் கடுகை சிறிதளவு எடுத்து மிக்ஸியில் அரைத்து குண்டுமணிஅளவு தேனில் கலந்து கொடுத்தால் இருமல் கட்டுக்குள் வரும்...எளிமையான கைவைத்தியம்     

நெல்லிக்காய், சுக்கு

* * * * * * * * * * * * * * *
300 கிராம் நெல்லிக்ககாய், 100கிராம் சுக்கு இரண்டையும் பொடி செய்து கலந்துகொண்டு அதனை ஒரு தேக்கரண்டி வீதம் நீரில் கலந்து காலையும் மாலையும் தொடர்ந்து அருந்தி வர கல்லீரலை நன்கு செயல்பட வைத்து ஜீரண சக்தியை அதிகரித்து நம் உடலில் தேங்கியுள்ள உள்ள கழிவுகளை முற்றிலும் வெளியேற்றும்.
மேலும் மூளைச் செல்களுக்கு நல்ல சக்தி அளித்து மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாக்கும்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். உடல் எடையை கூடாமல் தசைகளுக்கு பலம் அளிக்கும் தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது.
நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களான சளி, சைனஸ், மூக்கடைப்பு, இருமல் போன்ற வியாதிகளை கட்டுப்படுத்த உதவுகிறது. மற்றும் பித்தப்பையில் கல், போன்ற கோளாறுகளை சரி செய்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கும்.
பக்கவிளைவுகள் ஏதுமில்லாத இந்த எளிய உணவை மருந்தாக்கி உடல் உறுப்புகளை பலப்படுத்துவோம்