Monday, 2 April 2018

வியர்வை நாற்றம் மறைய, கண் பார்வை தெளிவு பெற, ஆஸ்துமா, வெண்குஷ்ட நோயை குணமாக்கும் கண்டங்கத்தரி

உடல் உஷ்ணம் காரணமாக சிறுநீர் இறங்கும் பொழுது நீர்த்தாரையில் எரிச்சலும் கடுப்பும் உண்டாகும். இதைக் குணப்படுத்த கண்டங்கத்திரியிலையைக் கொண்டு வந்து சுத்தம் செய்து இலையிலுள்ள முட்களை வெட்டி எடுத்து விட்டு, அம்மியில் வைத்து நைத்து, கையில் வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். இந்தச் சாற்றில் ஒன்னரைத் தேக்கரண்டியளவு எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து எந்த நேரத்திலும் சாப்பிட்டால், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்தில் எரிச்சல், கடுப்பு இல்லாமல் சிறுநீர் சரளமாக இறங்கும்.
வியர்வை நாற்றம் மறைய :
கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்துக் கொள்ள வேண்டும். இதனை உடலில் வியர்வை நாற்றம் இருப்பவர்கள் பூசிவர நாற்றம் நீங்கும்.
வாத நோய்கள் குணமாக :
கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல் லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி வடித்து தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்களுக்கு பூசி வர அவை நீங்கும்.
பாத வெடிப்புகளுக்கு :
ஒரு சிலருக்கு குதிகாலில் வெடிப்பு ஏற்படும். சில சமயம் வெடிப்பு பெரியதாகி இரத்தம் கசியும். இந்த சமயம் நடமாட முடியாதபடி வலிக்கும். ஒரு சிலருக்கு கால் பெருவிரல்களில் கூட வெடிப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு கைகளில் கூட வெடிப்பு உண்டாகும். இதைக் குணப்படுத்த கண்டங்கத்திரியிலையைக் கொண்டு வந்து, பத்து இலைகளை எடுத்து அம்மியில் வைத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு அதில் நான்கு தேக்கரண்டியளவு தேங்காஎண்ணெய்யை விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சச் வேண்டும். இலை எண்ணையில் சிவந்து, கருகும் சமயம் சட்டியை இறக்கி வைத்து எண்ணெய் ஆறிய பின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து விட்டு, எண்ணெயைத் துணியில் வடிகட்டி ஒரு கப்பில் விட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தேவையானபோது இந்த எண்ணெய்யை வெடிப்புகளின் மேல் தடவி வந்தால் பித்த வெடிப்பு மூன்றே நாளில் குணமாகும்.
நெஞ்சு சளி வெளியேற :
கண்டங்கத்திரி பூவை சேகரித்து வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி மூலநோய்க்கு பூசிவர நன்மை தரும். கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியை தூண்டும். கழிச்சலை உண்டாக்கும்.
வெண் குஷ்டம் மறைய :
வெண் குஷ்டத்திற்கு இதன் பழம் சிறந்த மருந்தாகும். கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண் குஷ்டம் உள்ள இடங்களில் பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.
நாள்பட்ட இருமலுக்கு :
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம்.
பல்வலி குணமாக :
பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும். நெருப்பில் இவற்றை போட புகை எழும். இந்த புகையை பற்களின் மேல்படும்படி செய்ய வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல்வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்.
கண் பார்வை தெளிவு பெற :
கண்டங்கத்திரிப்பூக்களை 100 கிராம் அளவு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.அத்துடன் சீரகம், திப்பிலி, நெல்லிமுள்ளி ஆகியவற்றை சேர்த்து தூள் செய்துகொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு பொடியைப் பாலில் கலந்து 48 நாட்கள்(ஒரு மண்டலம்) தொடர்ந்து சாப்பிட்டு வர கண்பார்வை கூர்மையாகும்.
மூட்டுவலி குணமாக :
கண்டங்கத்திரி இலைச்சாறு, வாத நாராயணா இலைச்சாறு, முடக்கத்தான் சாறுஆகியவற்றை வகைக்கு 100 மி.லி. எடுத்து, அத்துடன் ஒரு லிட்டர் நல்லெண்ணெய்சேர்த்து தைலபதமாய்க் காய்ச்சி இறக்கி, பின்னர் 50 கிராம் பச்சைக்கற்பூரம்தூள் செய்து சேர்க்கவும். இந்த தைலத்தில் தேவையான அளவு எடுத்து சூடுசெய்து கால்மூட்டுகளில் தேய்த்து வெந்நீர் ஒத்தடம் கொடுத்துவர,சகலவலிகளும் உடனே குணமாகும்.
ஆஸ்துமா குணமாக :
ஆஸ்துமாவை முழுமையாகக் குணப் படுத்தும் அற்புதத்திறன் கண்டங்கத்தரிக்குஉண்டு.
கண்டங்கத்திரி இலை, பூ, காய், வேர் ஆகிய வற்றை வகைக்கு 20 கிராம்எடுத்துக் கொள்ள வும். இத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்த ரத்தை,அதிமதுரம், சீரகம், சோம்பு, கடுஞ்சீரகம், ஜாதிக்காய், சடாமாஞ்சில்,சதகுப்பை, ஓமம், மாசிக்காய், கற்கடகசிருங்கி, ஏலக்காய், கடுக்காய்,இந்துப்பு, பச்சைக் கற்பூரம் போன்றவற்றை வகைக்கு பத்து கிராம் கலந்து,அனைத்தையும் தூள் செய்து பத்திரப்படுத்தவும்.
இதில் ஐந்து கிராம் அளவுபொடியை எடுத்து இரண்டு டம்ளர் (400 மிலி) நீருடன்சேர்த்து கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து சிறிது பனங்கற்கண்டுசேர்த்துச் சுவை யாக, காலை, மாலை இருவேளையும் தொடர்ந்து சாப்பிட்டு வர,சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சிரைப்பு, தலைவலி, தலைபாரம், தும்மல்,மூக்கடைப்பு, பசியின்மை போன்ற அனைத்து குறைபாடுகளும் நீங்கி, நித்தியசௌக்கியம் மற்றும் பூரண ஆயுளுடன் வாழலாம்.   


ஆரோக்கியமான மூட்டுகள் வேண்டுமா? பிரண்டை சாப்பிடுங்க! 


பிரண்டை உடலைத் தேற்றும்; பசியைத் தூண்டும்; மாதவிலக்கைத் தூண்டும்; மந்தம், குன்மம், இரத்தக் கழிச்சல், அஜீரணம் ஆகியவற்றைக் குணமாக்கும்.

பிரண்டை சதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம்.  மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை; விதை வழவழப்பானவை; வஜ்ரவல்லி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு.

பிரண்டைச் சாறு உடம்பில் பட்டால் அதிகமான அரிப்பும் நமைச்சலும் ஏற்படும். வேர், தண்டு ஆகியவை அதிகமான மருத்துவப் பயனுள்ளவை. தண்டு கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.

பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். இதனையே நாம் பொதுவாக உபயோகிக்கலாம்.

பிரண்டைத் தண்டுகளைச் சேகரித்து, மேல் தோலைச் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தேவையான அளவு நெய்யில் வதக்கி, தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்க வேண்டும். பின்பு கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.

பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும்.

நன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும்.

பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் ஒழுங்காக வரும்.

பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும். மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் இது உதவுகிறது.

மேலும் பிரண்டையை நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வரலாம்.பிரண்டையின் வேரை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை மாலை வேளைகளில் பத்து கிராம் அளவு சாப்பிட்டு வரவேண்டும். வஜ்ரவல்லி என்கிற பெயர்க் காரணம் உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டையின் குணத்தினாலேயே ஏற்பட்டது.

அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்.       


முப்பது நாட்களில் எடையை குறைக்கும் அருகம்புல் சாறு! 


தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம். அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்

1.நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

2.இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

3.வயிற்றுப் புண் குணமாகும்.

4.இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

5.நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

6.சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

7.நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

8.மலச்சிக்கல் நீங்கும்.

9.புற்று நோய்க்கு நல்ல மருந்து.

10.உடல் இளைக்க உதவும்

11.இரவில் நல்ல தூக்கம் வரும்.

12.பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

13.மூட்டு வலி நீங்கும்.

14.கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

15.நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்
சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு தாவரம் அருகம்புல்லாகும்.
இதன் ஆங்கில பெயர் Cynodon doctylon ஆகும். அருகம்புல் சர்க்கரை வியாதிகாரர்களுக்கும் சிறந்த மருந்து.

உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தை தூய்மையாக்கும், உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும். உடல் இளைக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம்.

சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.

ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.        

சதகுப்பை

பசியின்மை மற்றும் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளை குணமாக்கும் அற்புத மூலிகை சதகுப்பை


1. பசியைத் தூண்டி செரிமான சக்தியை அதிகரிக்கும்.
2. ஜீரண மண்டலம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த தீர்வு சதகுப்பை மூலிகை.
3. சுவை மண்டல கோளாறுகளையும் குணமாக்க வல்லது.
4. வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
5. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய மூலிகை சதகுப்பை.
6. விக்கல் சம்பந்தமான பிரச்சனைகளை குறைத்து விக்கலை இயற்கையாக குணமாக்கும்.
7. எலும்புகளை ஆரோக்யமாக வைத்திட உதவும்.
8. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் புழுக்களை வெளியேற்றி ஆரோக்யமாக வளர உதவும்.
9.மாத விலக்கு வலிகளை நீக்கும் மருத்துவ தன்மைக் கொண்டது சதகுப்பை மூலிகை.   


100 வயாகராவுக்கு சமமான ஜாதிக்காய் பற்றி தெரியுமா?


ஜாதிக்காய் என்பதற்கு குலக்காய், அட்டம், அட்டிகம் என்கின்ற வேறு பெயர்கள் இருக்கின்றன.

1. இது ஜீரணத்திற்கு மிக சிறந்த மருந்தாகும்

2. முகத்தை அழகாக்கும்: ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் பருக்கள் நாளடைவில்
மறையும், முகம் பொலிவடையும். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

3. தசைப்பிடிப்பை நீக்கும்: ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை சக்தியை அதிகரிக்கும். தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி, பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது.

4. ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் போட்டு தூளாக இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு மூடி வைத்துக் கொண்டு, காலை மாலை இரண்டு சிட்டிகையளவு தூளை எடுத்து, ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் போட்டுக் கலக்கி 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண் மலடு நீங்கும்.

5. ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில்வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும் பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்புதளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பலஉள்ளன, அதில் மிக எளிதாக மிகவும்பயனுள்ள மூலிகை ஜாதிக்காய். தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்   

எல்லாவித தோல் நோய்களையும் தீர்க்கும் சங்கன் குப்பி மூலிகை! 


இதை, ‘தோல் நோய் மருத்துவர்’ என்று கூடச் சொல்லலாம். கரப்பான், காளாஞ்சகப்படை (சொரியாசிஸ்), விஷக்கடி, ஊறல், தடிப்புகள் போன்ற அனைத்துவிதமான தோல் நோய்களுமே ‘அலர்ஜி’யால்தான் வருகின்றன என்று ஆங்கில மருத்துவத்தில் காரணம் சொல்வார்கள். பாரம்பர்ய மருத்துவத்தில், இவை விஷத்தால் உண்டாகிறது எனக் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், சங்கன் குப்பி இலைகளைப் பறித்துச் சிறிது மோர் அல்லது நீராகாரம் விட்டுத் துவையல்போல அரைத்து, 40 நாள்கள் வரை தினமும் காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சிறு நெல்லிக்காயளவு உண்டுவந்தால் ரத்தம் சுத்தமாகி தோல் நோய்கள் குணமாகத் தொடங்கும்.

சங்கன் குப்பி இலைகளைப் பச்சையாக அரைத்துக் கரப்பான், படைகள் மீது பூசி, அரை மணி நேரம் கழித்துக் கடலைமாவு அல்லது பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்து வந்தால் குணமாகும்.
சங்கன் குப்பி இலைகளைத் தண்ணீரில் போட்டுச் சூடுபடுத்தி மிதமான சூட்டில் குளித்து வந்தால், உடலில் ஏற்படும் சொறி, எரிச்சல் ஆகியவை குணமாகும். 


மனநோயை, கருப்பை கட்டிகளை குணமாக்கும் தொட்டால் சிணுங்கி!


1.தொட்டால் சிணுங்கி இலையை 15 கிராம் அளவு எடுத்து நன்றாக அரைத்து இரவு பாலுடன் கலந்து குடித்து வந்தால் ஆண்மை சக்தி பெருகும்.

2.தொட்டால் சிணுங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 10 முதல் 20 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட உடலில் கிளர்ச்சி பெருகும். சிறுநீர் கல் கரையும் தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும்,

3.உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும் ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரினை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சுண்டக் காய்ச்சவும், பின்னர் இதனை வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.

4.ஆண்மை பெருகும் ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

5.இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும். மூலநோய் நீங்கும் இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம்.

6.இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும்.

7.இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட செலுத்தி வைக்க ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மண்கலயத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாங்கும்படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி, குணமாகும்.   

டெங்கு மற்றும்  சிக்கன்குனியாவை விரட்டியடிக்கும் அற்புத மூலிகை  பேய்விரட்டி

1.கொசுக்கள் வராமல் தடுத்து, கொசுக்களால் வரும் டெங்கு, சிக்கன்குனியா போன்ற  தொற்று நோய்களிலிருந்து காப்பாற்றும்.

2.தொற்று நோய் கிருமிகளை அழித்து விஷக்காய்ச்சல் வராமல் தடுக்கும்.

3.டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சலால் ஏற்பட்ட பக்க விளைவுகளை குணமாக்கும்.

4.வயிறு மற்றும் பெருங்குடல்சம்பந்தமான அனைத்து உபாதைகளையும் படிப்படியாகக் குணமாக்கும்.

5.மனோவியாதிகளையும் குணமாக்கும் தன்மைக் கொண்டது பேய்விரட்டி.

6.ஒற்றைத்தலைவலி, தலைபாரம் போன்ற தலை சம்பந்தமான வலிகளுக்கு ஒரு சிறந்த மருந்து. 


சிறுநீரக செயலிழப்பு மற்றும் கல்லீரல் செயலிழப்பை குணமாக்கும் கீழாநெல்லி 


1.சிறுநீரக செயலிழப்பு மற்றும் கல்லீரல் செயலிழப்பை சரி செய்ய வல்லது கீழாநெல்லி.
2.தீராத ஈரல் நோய்களை குணமாக்கிடும் அற்புத மூலிகை கீழாநெல்லி.
3.கண் கோளாறுகளுக்கும், ரத்தகுழாய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிகச்சிறந்த மருந்து இந்த கீழாநெல்லி.
4.சிறுநீரக செயலிழப்பு மற்றும் கல்லீரல் செயலிழப்பை சரி செய்ய வல்லது கீழாநெல்லி.
5.விந்தணு குறைபாட்டை சரிசெய்து ஆண்களின் குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வளிக்கும் அருமருந்து கீழாநெல்லி.
6.சர்க்கரை நோயும் அதன் பக்க விளைவுகளையும் கட்டுப்படுத்தி ஆரோக்யமாக வைத்திடும்.
7.குழந்தைகளுக்கு பசியின்மையை போக்கி பசியை தூண்டி உடல் வளர்ச்சிக்கு வித்திடும்.         

சிறுநீரகத்தை சீராக்கும் பொங்கல் பூ, சிறு பீளை -


சிறுகண் பீளைச் செடிகளைப் பச்சையாகச் சேகரித்து… சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, உரலில் இடித்து அல்லது மிக்ஸியில் அரைத்து பிழிந்து பிறகு சாறு எடுக்க வேண்டும். இச்சாற்றை ஒரு வேளைக்கு 50 மில்லி என்ற அளவில் காலை, மாலை இரு வேளைகளிலும் குடித்து வந்தால்… கல்லடைப்பு, நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் ஆகியவை குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் அதி ரத்தப்போக்கு எனும் பெரும்பாடு நோயும் குணமாகும். இச்செடியின் வேரை சுத்தமாகக் கழுவி நிழலில் காய வைத்துக்கொண்டு… கஞ்சி காய்ச்சும்போது 10 கிராம் வேரையும் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால், கர்ப்பிணிகளின் சோர்வு நீங்கும். கரு தங்காத பெண்களுக்குச் சிறந்த பலனைக் கொடுக்கும்.

சிறுபீளை சமூலம் (ஒரு மூலிகைத் தாவரத்தின் இலை, வேர், தண்டு உள்ளிட்ட அனைத்து பாகங்களும் மருத்துவத்துக்கு பயன்பட்டால் அதற்கு சமூலம் என்று பெயர்), சிறுநெருஞ்சி சமூலம், மாவிலிங்க வேர், பேராமுட்டி வேர் ஆகியவற்றில், வகைக்கு 25 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, 4 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். அது கால் லிட்டராகச் சுண்டியவுடன் எடுத்து வடிகட்டி ஒரு ஃப்ளாஸ்க்கில் வைத்துக் கொண்டு…ஒரு நாளைக்கு 3 முதல் 5 வேளைகள் குடித்து வர வேண்டும்.

அதோடு, ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை கொதிக்க வைத்து ஆறிய சீரகத் தண்ணீரையும் குடிக்க வேண்டும். இப்படி 5 முதல் 10 நாட்கள் வரை குடித்தாலே அனைத்து விதமான சிறுநீரகக் கற்களும் கரைந்து வெளியேறிவிடும்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதால் சிறுநீரகத்தில் ஏற்படும் ‘ஹைட்ரோ நெஃப்ரோசிஸ்’ எனப்படும் சிறுநீரக வீக்கமும், கற்கள் அழுத்துவதால் ஏற்படும் வலியும், இக்குடிநீரால் மிக விரைவாகக் குணமாகிறது. அதிகமான கல்லடைப்பு வயிற்று வலியுடன் துடித்துக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்குக் கூட இக்குடிநீர் குடித்த 2 மணி நேரத்தில் வலி குறைந்துவிடும்.

ஒரு முள்ளங்கிக் கிழங்கு, 2 சின்ன வெங்காயம், அரைக் கரண்டி சீரகம், ஒரு கைப்பிடியளவு நீர்முள்ளி சமூலம் ஆகியவற்றை ஒன்றிரண்டாக இடித்து, மேற்குறிப்பிட்ட குடிநீர் சரக்குகளுடன் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்தால் இன்னமும் சிறப்பான பலன் கிடைக்கும்.

ஆங்கில வைத்திய முறையில், ‘லித்தோடிரிப்சி’ எனும் சிகிச்சை முறை மூலம் சிறுநீரகக் கற்களைக் கரைப்பார்கள். இச்சிகிச்சை எடுத்துக்கொண்ட சிலருக்கு மீண்டும் மீண்டும் கற்கள் உருவாகும். அத்தகைய நோயாளிகளையும் மூன்று மாதங்களில் இக்குடிநீர் குணப்படுத்திவிடும். இக்குடிநீர் எடுத்துக்கொள்ளும் சமயத்தில் பால் பொருட்கள், தக்காளி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இக்குடிநீரை தொடர்ந்து குடித்து வந்தால் பித்தப்பை கற்களும் கரைகின்றன. ஆனால், வெரு நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.அதே நேரத்தில், பித்தப்பை கற்களால் ஏற்படும் வலி மற்றும் பிற அறிகுறிகள் விரைவாகக் குறையும்.         


புற்று நோய், தோல் நோய்களை, வெள்ளைப்படுதலை நீக்கும் வெள்ளறுகு!


குன்மமொடு வாய்வு குடல்வாதம்
சூலையிவை சென்மம்விட் டோடிச் சிதையுங்காண்  வன்முலையாய் ள்ளுறுகி ரந்திசொறி யொட்டிய
சிரங்குமறும்
 வெள்ளறுகு தன்னை விரும்பு
- அகத்தியர் குணபாடம்.

 வெள்ளறுகானது மலத்தை இளக்கி, வெப்பத்தை அகற்றி,பசியைத் தூண்டி, உடலை உரமாக்கும் செயலாக உடையது .இது காச்சல், வாதம்,தோல்வியாதி, வயிற்று உப்புசம், பாம்புக்கடி, அஜீரணம், நீரிழுவு மற்றம் தொழுநோய் ஆகிய நோய்களைக் குணப்படுத்த வல்லது. இதில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெகனீசியம், சிலிக்கா, பாஸ்பேட். குளோரைடு, சல்பேட் மற்றும் கார்பனேட் உள்ளது..

வெள்ளறுகு செடியை வேறுடன் எடுத்து சுத்தமாகக்கழுவி இடித்து சாறு பிழிந்து இருபது மி.லி.. முதல் முப்பது மி,லி. வரை பாம்பு கடித்திருப்பவர்களுக்கு உள்ளே கொடுத்து கடிவாயில் செடியின் சக்கையை அரைத்து வைத்துக் கட்டியும் வர, இரண்டொருதரம் வாந்தி அல்லது பேதியாகும்.மீண்டும் ஒரு முறை கொடுக்க நச்சு இறங்கும்.புளி, உப்பு நீக்க வேண்டும்.

வெள்ளறுகு செடியை தேவையான அளவு எடுத்து வெந்நீர் விட்டு அரைத்து காலையில் சொறி, தினவு தவளைச சொறி சிரங்கு, மேகத்தடிப்பு, ஊறல் முதலியவை உள்ளவர்கள் பூசி, ஒரு மணி நேரம் சென்ற பின்னர் பேய் பீர்க்கங்காய் கூட்டால் உடலைத் தேய்த்துக் குளித்து வந்தால் அவை குணமாகும்.

வெள்ளறுகு செடியை எடுத்து சுத்தம் செய்து நன்றாக இடித்து அதனுடன் பத்து மிளகு, ஒரு துண்டு சுக்கு, நான்கு சிட்டிகை சீரகம் ஆகியவைகளைத் தட்டி மண் சட்டியில் போட்டு, எண்ணூறு மி.லி. நீர்விட்டு அதனை இருநூறு மி.லி.யாக வற்றும் வரை நன்கு காச்சி வடிகட்டி காலை, மாலை இரண்டு வேளை நூறு மி.லி வீதம் அருந்தி வர கீல்வாதம், நரம்புக் கோளாறுகள் முதலியவை கட்டுப்படும். வெள்ளறுகு பூண்டை அரைத்து சிறு சிரங்குகளுக்கும் பூசி வரலாம்.

பெண்களுக்கு மிகுந்த தொல்லை தருகின்ற நாட்பட்ட வெள்ளைப்படுதல்
நோய்க்கு வெள்ளறுகு செடியுடன் சிறிது மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்து
அரைத்து பாலில் கொடுக்கலாம்.  தேவையான வெள்ளறுகை வெண்மிளகுடன் சேர்த்து அரைத்து குடநீரிட்டு வடிகட்டி கொஞ்சம் பசுவின் வெண்ணெய் கூட்டி உடல் சூடாக இருக்கும் போது அருந்து வர சூட்டைத் தணிக்கும். வெள்ளறுகு முழுச்செடியையும்  சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர நீரழிவு நோய் கட்டுப்படும்.